வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் : தொடரும் மழை

(UDHAYAM, COLOMBO) – இலங்கையை சூழ்ந்துள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக மழையுடன் கூடிய காலநிலை தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

குறிப்பாக இந்த காலநிலை நாளை வரை காணப்படும் என்று திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஆகாயம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் மழை அல்லது இடியுடன் கூடிய மழை கிழக்கு ,வடக்கு ,வட மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டகங்களிலும் எதிர்பார்க்கப்பட்டுகின்றது.

நாட்டின் சில பகுதிகளில் நண்பகள் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும். சில பகுதிகளில் மணிக்கு சுமார் 75 மில்லிமீற்றருக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவுசெய்யப்படும் என்று திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மன்னாரிலிருந்து ஹம்பாந்தோட்டை, காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை வரையான நாட்டின் கடற்கரை பிரதேசங்களை அண்டிய பகுதிகளில் மழை மற்றும் இடியுடன் கூடிய மழை காணப்படும்.

காற்றின் வேகம் 30-40 கிலோமீற்றர் வேகத்தில் கிழக்கில் காணப்படும். கடற்கரை பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று திடீரென சுமார் 60-70 கிலோமீற்றர் வேகத்தில் பலமாக அதிகரிக்கும் என்றும் திணைக்களம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பலமான காற்று மற்றும் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்களை அவதானமாக இருக்குமாறு திணைக்களத்தின் வானிலை அறிக்கை கூறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *