நாடளாவிய ரீதியில் இன்று மாலை முதல் ஊரடங்குச் சட்டம் அமுலில்

(UTV |கொழும்பு) – இன்று (20) மாலை 6 மணி முதல் எதிர்வரும் திங்கள் (23) காலை 6 மணி வரை இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. 

Read More

இன்று முதல் 8 நாட்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய வாய்ப்பு

(UTV| கொழும்பு) -அரச மற்றும் தனியார் துறையினருக்கு இன்று(20) முதல் 8 நாட்களுக்கு வீட்டில் இருந்தவாறு வேலை செய்வதற்கு வாய்ப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Read More

வத்தளை – ஜாஎல பகுதிகளுக்கு ஊரடங்குச் சட்டம்

(UTV|கொழும்பு) – இன்று (19) இரவு 10.00 மணி முதல் வத்தளை, ஜாஎல பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Read More

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 59ஆக உயர்வு [UPDATE]

(UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் மூன்று பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. ———————————————————[UPDATE] கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் நால்வர் அடையாளம் (UTV|கொழும்பு)- இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் நால்வர் இனங்காணப்பட்டுள்ளனர். அதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களின் மொத்த எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

Read More

கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 243 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Read More

கொரோனா வைரஸ் – இத்தாலியில் 24 மணி நேரத்தில் 475 பேர் பலி

(UTV|இத்தாலி)- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 475 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவைத் தொடர்ந்து வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது. இத்தாலியில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3000 அக அதிகரித்துள்ளதுடன், 35,713 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 4000 பேர் குணமடைந்துள்ளனர். சீனாவில் 8,758 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர். அதன்படி, உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரை 8961 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,…

Read More

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் 8 பேர் அடையாளம்

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 8 பேர் இன்று (18) இனங்காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

Read More

முக கவசம் மற்றும் கிருமி நாசினிகளுக்கான வரி நீக்கம்

(UTV|கொழும்பு) – முக கவசம் மற்றும் கிருமி மருத்துவ நாசினிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த வரி இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More

முக கவசம் மற்றும் கிருமி மருத்துவ நாசினிகளுக்கு இறக்குமதி வரி நீக்கம்

(UTV|கொழும்பு) – முக கவசம் மற்றும் கிருமி மருத்துவ நாசினிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி வரி இன்று நள்ளிரவு முதல் நீக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

Read More