(UTV|இத்தாலி)- கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இத்தாலியில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 475 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
சீனாவைத் தொடர்ந்து வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி பதிவாகியுள்ளது.
இத்தாலியில் கொரோனா உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3000 அக அதிகரித்துள்ளதுடன், 35,713 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் 4000 பேர் குணமடைந்துள்ளனர்.
சீனாவில் 8,758 பேர் இதுவரையில் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி இதுவரை 8961 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 219,087 பேர் இந்த தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.