தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வட்வரி நீக்கப்படும்.
எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மருந்துகள், பாடசாலை கற்றல் உபகரணங்கள், உணவுப்பொருட்கள் மீதான வட்வரி நீக்கப்படும் என கட்சியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். தங்காலையில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ள அவர் எளிமைப்படுத்தப்பட்ட வரிமுறைமை அறிமுகப்படுத்தப்படும்,மதுபான உற்பத்தியாளர்கள் போன்ற வர்த்தகர்கள் செலுத்த தவறிய வரியை மீளப்பெறுவதற்கான நடவடிக்கைகள் இடம்பெறும் என தெரிவித்துள்ளார். மருந்துகள் மருத்துவபொருட்கள் மீதான வட் வரியை நீக்குவோம்,பாடசாலை பொருட்கள் மேலதிக வாசிப்பு புத்தகங்கள் மீதான…