கனடா தூதுவரை அழைத்து கடும் அதிருப்தியை வெளியிட்டார் அலி சப்ரி

கனடாவின் பிரம்டனில்  தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை  அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டமைக்கு  இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை வெளிவிவகார அமைச்சர்  இலங்கைக்கான கனடா தூதுவரை அழைத்து தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

கனடாவின் வாக்குவங்கி அரசியலுக்காக தொடர்ந்து பரப்பப்படும் இந்த பொய்யான கதையை இலங்கை அரசாங்கம் திட்டவட்டமாக நிராகரிப்பதாக அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பிராம்டன் நகரசபையின் தவறான ஆலோசனையின் அடிப்படையிலான செயற்பாடு இலங்கையில் உள்ள அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும் புண்படுத்துகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்ற   குற்றச்சாட்டானது,தீங்கிழைக்கும் தவறான தகவல்களை அடிப்படையாக கொண்ட புனையப்பட்ட மற்றும் தேசிய சர்வதேச அளவில் எந்தவொரு பொறுப்பான அதிகாரியாலும் நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டு என அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடந்தஇரண்டு வருடங்களாக பொருளதார நெருக்கடி நிலவிய போதிலும்,மோதல் முடிவிற்கு வந்த பின்னர் நல்லிணக்கத்தை வளர்ப்பதற்கும், நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கம் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றது என தெரிவித்துள்ள அலி சப்ரி கனடா அரசாங்கம் தலையிட்டு குறிப்பிட்ட நினைவுத்தூபியை கட்டுவதை தடுத்துநிறுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *