தலதா அத்துகோரள எம்.பி பதவியை இராஜினாமா செய்தார்.

இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள  பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்துள்ளார் பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை இன்று (21)  விடுத்த அவர், இரத்தினபுரி மாவட்ட மக்கள் தனக்களித்த ஆதரவுக்காக நன்றியையும் தெரிவித்தார். ரணிலும் சஜித்தும் இணைந்து நாட்டை முன்னேற்றக் கூடிய ஒரு திட்டத்தை தான் உட்பட்ட தரப்பு முன்வைத்தபோதும் அது சாத்தியப்படாமை குறித்து தனது உரையில் கவலை வெளியிட்டுள்ளார். சஜித் ஆட்சிக்கு வந்தால் கோட்டாவின் ஆட்சியை போன்று அது அமைந்து விடும் என்றும் அவர்…

Read More

அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு தொடர்பில் ஜனாதிபதி ரணில்

கொழும்பு, காலி, கண்டி மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களை இலங்கையின் பிரதான மையங்களாகக் கட்டியெழுப்ப அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி நகரை கலாசார மற்றும் கலை மையமாகவும், காலநிலை மாற்றங்களுக்கான பல்கலைக்கழகமாகவும் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். “எங்கள் மத்திய அதிவேக நெடுஞ்சாலை கலகெதரவில் நிறுத்துவதற்குப் பதிலாக கடுகஸ்தோட்டைக்கு வரை கொண்டு செல்லுமாறு ஜப்பானிடம் நான் கேட்டுக்கொண்டேன். இது ஒரு பெரிய நகர்ப்புற பகுதியாக சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டியை ஒரு பெரிய…

Read More

ஊழலை ஒழித்து பொருளாதார சுதந்திரத்தை உருவாக்கும் பணியில் இணைந்து கொள்ளுங்கள்.

பொருளாதாரப் பேரழிவின் விளிம்பில் சிக்கி இருக்கின்ற நாட்டை மீட்டெடுப்பதற்கு முடியுமான ஞானமும் திறமையும் உள்ள சிறந்த குழு என்னிடம் இருக்கின்றது. மனிதாபிமான முதலாளித்துவத்தையும், சமூக ஜனநாயகத்தையும் ஒன்றோடு ஒன்று இணைத்து ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதார மேம்பாட்டின் ஊடாக நமது நாட்டை செழிப்பான நாடாகவும், துரித பொருளாதார அபிவிருத்தியுடைய நாடாகவும் மாற்றி, அதன் பிரதிபலனின் சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் பகிர்ந்தளிக்கும் பொருளாதார கட்டமைப்பிற்கு இந்தக் குழுவோடு செல்ல முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். இந்த புதிய…

Read More

பாராளுமன்ற உறுப்பினராக பந்துலால் பண்டாரிகொட சத்தியப்பிரமாணம்

பந்துலால் பண்டாரிகொட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக இன்று (21) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். மனுஷ நாணயக்கார பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்ததன் காரணமாக பந்துலால் பண்டாரிகொட பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். அமைச்சர்களான மனுஷ நாணயக்கார மற்றும் ஹரின் பெர்னாண்டோ ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இரத்து செய்ய ஐக்கிய மக்கள் சக்தி எடுத்த தீர்மானம் சட்டப்பூர்வமானது என உயர் நீதிமன்றம் கடந்த  9 ஆம் திகதி தீர்ப்பளித்தது. தமது கட்சி…

Read More

கைகலப்பில் ஈடுபட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்.

மலையக தமிழ் எம்.பிக்கள் இருவர் தனியார் தொலைக்காட்சி விவாத இடைநடுவில் கைகலப்பில் ஈடுபட்டனர். பாராளுமன்ற உறுப்பினர்களான திகாம்பரம் மற்றும் வேலுகுமார் ஆகியோருக்கு இடையிலேயே கைகலப்பு ஏற்பட்டது.

Read More

நாமலின் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டம் இன்று (21) அனுராதபுரத்தில் நடைபெறவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். பொதுஜன பெரமுனவின் முதலாவது ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார கூட்டத்தை அனுராதபுரத்தில் நடத்த முடிந்தமை பொதுஜன பெரமுனவுக்குக் கிடைத்த வெற்றியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். ”ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் வெற்றியடையச் செய்யும் நோக்கில் இன்று பிற்பகல் 2 மணிக்கு அனுராதபுரம் கடபனஹா பிரதேசத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாபெரும் தேர்தல் பிரச்சார கூட்டம்…

Read More

ஹரீஸ் ரணிலுடன் இணையவில்லை செய்திக்கு மறுப்பு

ஒரு சில சமூக வலைத்தளங்களிலும், சமூக ஊடகங்களிலும் அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் ஆதரவளிப்பதாக போலியான உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். அந்த செய்திகளில் எவ்வித உண்மைகளும் இல்லை என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் ஊடகப்பிரிவு மறுப்பறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கொள்கை, கட்சி தீர்மானங்களை மீறி எவ்வித…

Read More

தபால் மூல வாக்களிப்புக்கு 7 இலட்சத்து 12 ஆயிரம் பேர் தகுதி.

ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கு இம்முறை 712 ,321 வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர். கிடைக்கப் பெற்ற 736 ,586 விண்ணப்பங்களில் 24 , 286 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார். தேர்தல்கள் அலுவலகத்தில் இன்று  செவ்வாய்க்கிழமை (20)  இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது,  ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் நிறைவுப் பெற்றுள்ளன. தேர்தல் சட்டம் மீறல், வன்முறை செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள்…

Read More

உலகின் மிக நீளமான முத்திரை ஜனாதிபதியிடம் கையளிப்பு

கண்டி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலதா மாளிகை பெரஹராவை குறிக்கும் வகையில் தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட உலகில் மிக நீளமான முத்திரையான 205 மி.மீ நீளமான  நினைவு முத்திரை சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

Read More

முஸ்லிம் காங்கிரஸ் எம்பி ஹரீஸ் ரணிலுடன் இனைவு.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரீஸ், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கி ஜனாதிபதி ரணிலுடன் இனைந்துள்ளார் என தெரியவருகிறது ஆனால் இதுவரையில் உத்தியோகப்பூர்வமாக எந்தவித அறிவிப்பும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய தினம், அவரை கட்சியிலிருந்து நீக்கியதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று அவருக்கான கடிதத்தையும் அனுப்பி வைத்ததும் குறிப்பிடத்தக்கது. ஏலவே முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மெலளானாவும் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிவருவதும் குறிப்பிடத்தக்கது!

Read More