Category: உள்நாடு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – முன் எச்சரிக்கை கடிதம் உண்மை
(UTV|COLOMBO) – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கபட்ட ஜனாதிபதி விசாரணைக்குழுவின் நடவடிக்கைகள் இன்றும்(23) இடம்பெறவுள்குறித்த விசாரணைக் குழுவின் நடவடிக்கைகள் கடந்த வாரம் இடம்பெற்றதுடன் இதன்போது சஹ்ரான் இலங்கையினுள் கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக எச்சரிக்கை கடிதம் ஒன்று கடந்த 11 ஆம் திகதி வட கொழும்பு பொலிஸ் பிரிவின் பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ பண்டாரவின் காரியாலயத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதனடிப்படையில் இன்றைய தினம் பொலிஸ் அத்தியட்சகர்…
ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியலில் [VIDEO]
(UTV|COLOMBO) – கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் எதிர்வரும் ஜனவரி 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் ஊடாக கொலை குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்தி குறித்த நபர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக…
சம்பிக்கவின் கைது தொடர்பில் சபாநாயகருடன் ஐ.தே.க கலந்துரையாடல்
(UTV|COLOMBO) – பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் கைது தொடர்பில் சபாநாயகர் கருஜயசூரியவுடன் இன்று(23) ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த கைதானது சட்டவிதிமுறைகளுக்கு முரணனாதென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பிற்கான 3 ரயில்கள் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் இரத்து
(UTV|COLOMBO) – நாட்டில் நிலவும் கடும் மழையுடனான வானிலை காரணமாக மட்டகளப்பு ரயில் நிலையத்திலிருந்து கொழும்பிற்கான 3 ரயில்கள் உட்பட அனைத்து ரயில் சேவைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் மட்டகளப்பிலிருந்து மாகோ உள்ளிட்ட ஏனைய இடங்களுக்கான சேவைகளும் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சில பகுதிகளில் ரயில் பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மோல் சமிந்தவின் மனைவி கைது
(UTV|COLOMBO) – போதை பொருள் வர்த்தகரான மோல் சமிந்தவின் மனைவி வாழைத்தோட்டம் பகுதியில் விந்து நேற்று கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 20 லட்சம் ரூபா பெறுமதியுடைய 270 கிராம் ஹெரோய்ன் போதை பொருள் மீட்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த விசேட வர்த்தமானி
(UTV|COLOMBO) – நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஆயுதம் ஏந்திய இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவதுடன் தொடர்புடைய உத்தரவை நீடிக்கும் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று(22) வௌியிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பிறப்பிக்கப்பட்ட அவசர கால சட்டத்தை நீக்கியதன் பின்னர் பொதுமக்களின் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியால் நாட்டினுள் அமைதியைக் காக்கும் பொருட்டு இராணுவம், கடற்படை மற்றும் விமானப் படையினர் அழைக்கப்பட்டுள்ளனர்.
மக்களின் எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் – ஜனாதிபதி
(UTVNEWS | COLOMBO) – தம்மை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த மக்களின் எதிர்பார்ப்புகள் உயர்ந்தபட்சமாக நிறைவேற்றப்படும் என மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார். “மக்கள் இரண்டு பிரதான நோக்கங்களுடனேயே எனக்கு வாக்களித்தனர். தேசிய பாதுகாப்பினை உறுதிசெய்வது அவற்றுள் முதன்மையானதாகும். மற்றையது துரித பொருளாதார அபிவிருத்தியினூடாக சிறந்ததொரு சமூகத்தைக் கட்டியெழுப்புவதாகும். இந்த குறிக்கோள்களை அடைவதற்கான நடவடிக்கைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றுவதே எனது எதிர்பார்ப்பாகும்.” என அவர் மேலும் தெரிவித்தார்.
ராஜித தாக்கல் செய்த முன்பிணை மனு நிராகரிப்பு
(UTV|COLOMBO) – இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முன்பிணை மனு கொழும்பு பிரதான நீதவானால் இன்று(20) நிராகரிக்கப்பட்டுள்ளது.
அரிசிக்கு சில்லறை விலை நிர்ணயம்
(UTV|COLOMBO) – சம்பா மற்றும் நாட்டரிசி ஒரு கிலோ கிராமிற்கு 98 ரூபா ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை, இந்த அரிசி வகைகளுக்கான ஆகக்கூடிய சில்லறை விலையிலும் பாரக்க விற்பனை செய்யப்படும் அரிசி தயாரிப்பு இறக்குமதியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்;கை மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு
(UTV|COLOMBO) – அனைத்து மதுபான சாலைகளும் எதிர்வரும் 25ம் திகதி கிறிஸ்மஸ் பண்டிகை தினத்தன்று மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.