Category: உள்நாடு
1,700 ரூபா சம்பளம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றம்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1,700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று (12) நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பள அதிகரிப்பு தொடர்பில் சம்பள நிர்ணய சபையில் இன்று வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த வாக்கெடுப்பில் சம்பள அதிகரிப்பிற்கு ஆதரவாக 14 பேரும், எதிராக 3 பெருந்தோட்ட நிறுவனங்களும் வாக்களித்துள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். இதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த அடிப்படை சம்பளமாக 1,350 ரூபாவும், வருகை ஊக்குவிப்பு…
அரியநேத்திரனுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள, தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழு உறுப்பினரான த.சிற்பரன் கட்டுப்பணத்தை செலுத்தினார்.
புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து.
பெருந்தோட்ட மக்களை வலுவூட்டும் நோக்கில் பெருந்தோட்ட அரசியல் கட்சித் தலைவர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர்சஜித் பிரேமதாச இன்று திங்கட்கிழமை (12) புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன், பழனி திகாம்பரம் மற்றும் எம்.உதயகுமார உள்ளிட்ட தோட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதில் கையொப்பமிட்டனர்.
ஜனாதிபதி தேர்தல் – இதுவரை 337 முறைப்பாடுகள் பதிவு.
ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான தேர்தல் முறைப்பாடுகள் மேலும் அதிகரித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் 17 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஜூலை 31 முதல் நேற்று (11) வரை 337 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ரொஷான் ரணசிங்கவுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது. அலோக ரணசிங்க என்பரே முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக பதவிப் பிரமாணம்.
வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். பாராளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷவின் இராஜிநாமாவை அடுத்து ஜனாதிபதியால் இந்த பதவிப் பிரமாணம் வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மொட்டு கட்சி அமைப்பாளர் சஜித்துடன் இணைவு.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் ஐக்கிய மக்கள் சக்தியில் நேற்று (11) இணைந்து கொண்டுள்ளார். நீண்டகாலமாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளராக செயற்பட்டுவந்த ப.சந்திரகுமார் என்பவரே இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ளார். இந்நிலையில், எதிர்கட்சி தலைவரும் ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான சஜித் பிரேமதாச கட்சி அலுவலகத்தில் வைத்து சம்பிரதாய பூர்வமாக ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் பதவியை வழங்கி வைத்துள்ளார்.
யாருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை – சந்திரிகா
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். தேர்தல் களத்தில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுடன் அத்தனகலயில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின்போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. நிட்டம்புவ ஹொரகொல்ல பண்டாரநாயக்க ஞாபகார்த்த நூலக வளாகத்தின் முதல் மாடியிலுள்ள கேட்போர் கூடத்தில் இந்த விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெரிவிப்பதற்காக அத்தனகல்ல பிரதேசத்தில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்…
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை.
உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் அதிகாரிகள் எனக்கூறி சிலர், வர்த்தகர்களிடம் சென்று பணம் வசூலிப்பதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு பணம் சேகரிக்க வருவோரிடம் பணத்தை வழங்க வேண்டாம் என அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. இவ்வாறானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தும் வகையில் அதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டு இறைவரி திணைக்களம், இலங்கை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளது. இவ்வாறு அறவிடப்படும் பணத்திற்கு தாம் பொறுப்பல்ல என உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….
வேட்புமனுவில் கையொப்பமிட்டார் அனுரகுமார.
எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (12) முற்பகல் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமை அலுவலகத்தில் அனுரகுமார திஸாநாயக்க வேட்பாளர் வேட்புமனுவில் கையொப்பமிட்டுள்ளார். இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் தோழர் டாக்டர் நிஹால் அபேசிங்க, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வாவை உள்ளிட்ட தேசிய நிறைவேற்றுப் பேரவை உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டிருந்தனர்.