ஹமாஸின் ராணுவ பிரிவின் தலைவர் பலி – இஸ்ரேல் அறிவிப்பு.

ஹமாஸ் அமைப்பின் ராணுவப் பிரிவின் தலைவராகக் கருதப்படும் மொஹமட் தைஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்ததுள்ளது. கடந்த 13ம் திகதி காசா பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காசா பகுதியின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தில் இருந்த போது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் மொஹமட் தைஃப் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read More

இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் ஆரம்பியுங்கள் – ஈரான் தலைவர் அதிரடி உத்தரவு

ஹமாஸின் இயக்கத்தின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவின் ஈரான் தலைநகர் தெஹ்ரானில் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேலை நேரடியாக தாக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹனியே படுகொலை செய்யப்பட்டதற்கு பழி தீர்க்கும் நோக்கில் ஈரானிய உச்ச தலைவர் அலி கமேனி இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்த உத்தரவிட்டுள்ளதாக சர்வதேச ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. இரண்டு புரட்சிகர காவலர் உறுப்பினர்கள் உட்பட, பெயரிடப்படாத மூன்று ஈரானிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி, சர்வதேச ஊடகம் தகவல் புதன்கிழமை காலை ஹனியே கொல்லப்பட்டதாக…

Read More

பங்களாதேஷ் போராட்டம் – ஐ.நாவிற்கு அழைப்பு விடுத்த பிரதமர்

பங்களாதேஷில் பல்கலைக்கழக மாணவர்கள் அரசு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு சீர்திருத்தம் என்ற பிரச்சினையை முன்வைத்து நடத்திய போராட்டம் இறுதியில் வன்முறையாக மாறி 100 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர். இச்சம்பவம் தற்போது முடிவுக்கு வந்தநிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்த ஐ.நா.வும் பிற சா்வதேச அமைப்புகளும் பங்கேற்க வேண்டும். அத்துடன் மாணவர்களின் போராட்ட வன்முறை குறித்து விசாரணை சுதந்திரமாகவும் நோ்மையாகவும் நடைபெற வேண்டும் என்றும் அந்த நாட்டு பிரதமா் ஷேக் ஹசீனா நேற்று அழைப்பு…

Read More

ஈரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை – ஹமாஸ் தகவல்.

பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பின் தலைவராகக் கருதப்படும் இஸ்மயில் ஹனியே, ஈரானில் கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் தங்கியிருந்த வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் கொல்லப்பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தியதாக ஹமாஸ் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இந்த குற்றச்சாட்டுக்கு இஸ்ரேல் இதுவரை பதிலளிக்கவில்லை. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் தங்கள் குழுவின் முக்கியத் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதாக ஹமாஸ் குழு தெரிவித்துள்ளது. ஈரான்…

Read More

இந்தோனேசியாவில் நில நடுக்கம்

இந்தோனேசியா, கிழக்கு மாலுகு மாகாணத்தில் இன்று காலை 6.0 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 170 கிலோமீற்றர் ஆழத்தில் 121 கிலோமீற்றர் தொலைவில் மையம் கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Read More

நேபாளத்தில் விமான விபத்து -18 பேர் பலி – ஒரு விமானி காயங்களுடன் மீட்பு.

நேபாளத்தில் 19 பேருடன் புறப்பட்ட விமானம் ஒன்று ஓடுபாதையில் இருந்து சறுக்கி, தரையில் மோதி தீப்பிடித்தது. இந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். ஒரு விமானி மட்டும் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளார். நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பொக்காராவுக்கு சவுரியா ஏர்லைன்ஸ் விமானம் புறப்பட்டது. 19 பேருடன் சென்ற இந்த விமானம், திடீரென ஓடுபாதையில் இருந்து சிறிது தூரம் பறந்ததும், கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்தது….

Read More

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்.

இந்தோனேசியா, பப்புவா மாகாணத்தில் இன்று காலை 5.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மம்பெரமோ தெங்கா ரீஜென்சிக்கு வடகிழக்கே 96 கிலோமீற்றர் தொலைவில் 26 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சுனாமி ஏற்படுவதற்கான எந்த எச்சரிக்கையும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More

எத்தியோப்பியாவில் பயங்கர நிலச்சரிவு – 157 பேர் பலி

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கிப் பலியானோர் எண்ணிக்கை 157ஆக உயர்ந்துள்ளது. கடந்த 21-ஆம் திகதி தெற்கு எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் உள்ளிட்டோர் உயிரிழந்துள்ளனர். திங்கள் கிழமையின் பிற்பகுதியில் 55 ஆக இருந்த பலி எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 157 ஆக உயர்ந்துள்ளது. அப்பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக கோபா மண்டல…

Read More

முதியோர் இல்லத்தில் புகுந்து துப்பாக்கி சூடு – 6 பேர் பலி

குரோஷியா நாட்டின் தாருவார் நகரில் உள்ள தனியார் முதியோர் இல்லத்தில் மர்ம நபரொருவர் திடீரென உள்ளே புகுந்து துப்பாக்கித் தாக்குதல் நடத்தியுள்ளார். இத்தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 5 பேருடன் ஊழியர் உட்பட அறுவர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளதாக குரோஷியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர் தப்பியோடியவர் உணவு விடுதி ஒன்றில் வைத்து கைது செய்யப்பட்டார்.

Read More

ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம்.

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்து குஷ் பகுதியில் இன்று பகல் 12.33 மணியளவில் 4.6 ரிச்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நில நடுக்கத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More