ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இன்று அவசரமாக கூடுகிறது!

இஸ்ரேல் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் காரணமாக உலகப்போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை இன்று அவசரமாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேல் ஈரானால் தாக்கப்பட்ட நிலையில், ​​இஸ்ரேலின் அண்டை நாடான ஜோர்டான் அவசரகால நிலையை அறிவித்து வான்வெளியை மூட முடிவு செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவதால், இஸ்ரேலின் நண்பரான அமெரிக்கா, ‘ஒதுங்கி நிற்க வேண்டும்’ என, ஈரான்…

Read More

இஸ்ரேல் மீது ஈரான் தனது வான்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ளது

எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் தனது வான்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ளது. நேற்று இரவு ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகளை பயன்படுத்தி தெஹ்ரானில் இருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. சிரியாவில் உள்ள ஈரான் துணைத் தூதரகம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஏழு இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை உறுப்பினர்கள் கொல்லப்பட்டு சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரான் இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதலை…

Read More

ஈரானின் தாக்குதல் மிரட்டலில் இஸ்ரேல் உஷார் நிலையில்…!

சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் கடந்த வாரம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 2 இராணுவ தளபதிகள் உள்பட 9 பேர் பலியானார்கள். இதனால் கடும் ஆத்திரமடைந்துள்ள ஈரான், தக்க பதிலடி கொடுப்போம் என்று சூளுரைத்துள்ளது. இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்று தகவல் வெளியானது. மேலும், இவ்விவகாரத்தில் ஒதுங்கி இருக்குமாறு அமெரிக்காவிடம் ஈரான் தெரிவித்தது. இதற்கிடையே இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த ஈரான் முழுவீச்சில்…

Read More

போருக்கு தயாராக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது- வட கொரியா

வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜாங் உன் நாட்டைச் சுற்றியுள்ள நிலையற்ற புவிசார் அரசியல் சூழ்நிலைகள், முன்னெப்போதையும் விட இப்போது அதிகரித்துள்ளதால் போருக்கு தயாராக இருக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கூறியுள்ளார். வடகொரியாவின் இராணுவம் மற்றும் அரசியல் பல்கலைக்கழகத்தை ஆய்வு செய்தபோதே கிம் ஜாங் உன் இந்த கருத்தை தெரிவித்தார். ”வட கொரியாவுடன் இராணுவ மோதலை எதிரி தேர்வு செய்தால், தங்கள் வசம் உள்ள அனைத்து வழிகள் ஊடாக தயக்கமின்றி எதிரிக்கு மரண அடியை கொடுப்போம். முன்னெப்போதையும்…

Read More

பெற்ற தாய்யை தேடும், ஜேர்மனில் வசிக்கும் இலங்கை பெண்

ஜேர்மனியில் வசிக்கும் இலங்கை பெண் ஒருவர் தன்னை பெற்ற தாயை தேடி மீண்டும் இலங்கைக்கு வந்துள்ளார். 1990 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி காலை 7.30 மணியளவில் கொழும்பு காசல் வைத்தியசாலையில் பிறந்ததாகவும், இதன் பின்னர் தான் ஜேர்மனிய தம்பதியினருக்கு தத்துக்கொடுக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது பிறப்புச்சான்றிதழில் உள்ள இலங்கை பெயர் வாசனா மல்காந்தி எனவும், மூன்று மாத குழந்தையாக இருந்தபோது தனது பெற்றோர் ஜேர்மனிய தம்பதியினரிடம் தத்துக்கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும், தனது பிறப்புச்…

Read More

உலகின் சில பகுதிகளில் இன்று முழு சூரிய கிரகணம்!!

உலகின் சில பகுதிகளில் இன்று முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளது. இந்த அரிய நிகழ்வானது கனடா, 15 அமெரிக்க மாநிலங்கள், மெக்சிகோ மற்றும் வட அமெரிக்கா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் 4 நிமிடங்கள் மற்றும் 28 வினாடிகள் வரை நீடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. முழு சூரிய கிரகணம் என்பது மிகவும் அரிதான விடயம் என நாசா(NASA) தெரிவித்துள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது, ​​ சந்திரன் சூரியனை முழுவதுமாக மறைத்து பூமியின் மீது…

Read More

உடைந்த பாலத்தின் நிலை: காப்பீடு தொகை அறிவிப்பு

அமெரிக்காவின் பிரான்சிஸ் ஸ்கொட் என்ற பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து, இடிபாடுகளை அகற்றுவதற்காக கிழக்கு அமெரிக்க கடற்கரையில் உள்ள மிகப்பெரிய கிரேன் பால்டிமோருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளதால் அந்நாட்டின் பரபரப்பான துறைமுகமான இதில் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. இடிபாடுகளுக்கு இடையில் நீந்தும் அபாயம் காரணமாக நான்கு தொழிலாளர்களின் சடலங்களை தேடும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாலத்தை மீட்டெடுக்க 60 மில்லியன் டொலர் மத்திய அரசின் அவசர நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,…

Read More

கனடாவில் புகலிடம் கோரும் வெளிநாட்டவர்களை நாடு கடத்த ஏற்பாடு!

கனேடிய விமான நிலையங்களில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, கனடா எல்லை சேவைகள் முகவரகம் தெரிவித்துள்ளது.  Montreal Trudeau மற்றும் Toronto Pearson விமான நிலையங்களில் அதிகளவான வெளிநாட்டவர்கள் புகலிடம் கோரியுள்ளனர். கனடாவுக்கு விசிட்டர் விசாவில் சென்றுள்ள பல தமிழர்கள் புகலிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 2019 முதல் 2023 வரை விமான நிலையங்களில் சுமார் 72,000 பேர் அகதிகள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இது கடந்த ஐந்தாண்டு காலத்தில் கனடாவில் பதிவான அகதிகள் கோரிக்கைகளில் 18 சதவீதத்திற்கு…

Read More

ரஷியாவில் பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 60 ஆக உயர்வு

ரஷியாவின் தலைநகர் மாஸ்கோவில் இருந்து மேற்கு பகுதியில் குரோகஸ் சிட்டி ஹால் என்ற பெயரில் இசை அரங்கு ஒன்று அமைந்துள்ளது. 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கூடும் பரப்பளவு கொண்ட இந்த அரங்கத்தில், பிரபல இசைக்குழு ஒன்றின் இசை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. இந்த இசை நிகழ்ச்சியில் கிறிஸ்தவர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். இந்நிலையில் அரங்கிற்குள் திடீரென புகுந்த ஆயுதமேந்திய மர்ம கும்பல் அதிரடியாக தாக்குதலில் ஈடுபட்டது. உள்ளே கூடியிருந்தவர்களை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டும், அரங்கிற்கு…

Read More

வெடுக்குநாறிமலை கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படும் அரச அடக்குமுறைகளுக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் பல்கலைக்கழக மூன்றலில் கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. 19 நண்பகல் 12:00 மணி அளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில்,  தமிழர்களுக்கு எதிராக இடம் பெறும் அரச அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இப் போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், ஊழியர் சங்கத்தினர், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Read More