உடைந்த பாலத்தின் நிலை: காப்பீடு தொகை அறிவிப்பு

அமெரிக்காவின் பிரான்சிஸ் ஸ்கொட் என்ற பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து, இடிபாடுகளை அகற்றுவதற்காக கிழக்கு அமெரிக்க கடற்கரையில் உள்ள மிகப்பெரிய கிரேன் பால்டிமோருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளதால் அந்நாட்டின் பரபரப்பான துறைமுகமான இதில் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இடிபாடுகளுக்கு இடையில் நீந்தும் அபாயம் காரணமாக நான்கு தொழிலாளர்களின் சடலங்களை தேடும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலத்தை மீட்டெடுக்க 60 மில்லியன் டொலர் மத்திய அரசின் அவசர நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பாலம் இடிந்து விழுந்ததற்கான காப்பீட்டு இழப்பீடு 3 பில்லியன் டொலரைத் தாண்டும் என்றும் வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *