ஒலிம்பிக்கில் முதல் இலங்கையராக வரலாறு படைத்த அருண தர்ஷன.

ஒலிம்பிக் வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்கிய இலங்கையராக அருண தர்ஷன பதிவாகியுள்ளார். ஒலிம்பிக் விழாவொன்றில் ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் அரைஇறுதி சுற்றுக்கு தகுதிபெற்ற முதல் இலங்கையர் எனும் மைல்கல் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக் விழாவில் அவர் இந்த மகத்தான ஆற்றலை வௌிப்படுத்தினார். ஆடவருக்கான 400 மீற்றர் ஓட்டத்தில் முதல் சுற்றுப் போட்டியில் அருண தர்ஷன மூன்றாமிடத்தைப் பிடித்தார். போட்டியைப் பூர்த்தி செய்ய அவருக்கு 44.99 செக்கன்கள் சென்றதுடன் இதன் மூலம் அரைஇறுதி சுற்றுக்கு தகுதிபெற்றார்….

Read More

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து.

ஆசிய கிண்ணத்தை வென்ற சமரி அதபத்து உள்ளிட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துத்  தெரிவித்தார். “உங்களுடைய தோல்வியற்ற பயணத்திற்கு உங்கள் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு செயற்பாடு சான்றாக அமைகிறது. நீங்கள் எமது நாட்டை கௌரவப்படுத்தியுள்ளீர்கள் என ஜனாதிபதி தனது வாழ்த்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More

முதல் முறையாக ஆசியக் கிண்ணத்தை வென்றது இலங்கை மகளிர் அணி.

9வது மகளிர் ஆசியக் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. இந்திய அணிக்கு எதிரான இன்று இடம்பெற்ற ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 ஓவர் இறுதிப்போட்டியில் இலங்கை அணி, இந்திய அணியை 08 விக்கெட்டுக்களால் வீழ்த்தி  ஆசியக் கிண்ணத்தை  முதல் முறையாக வென்றுள்ளது. ரங்கிரி தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற இந்திய மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய மகளிர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள்…

Read More

பயிற்சியின் போது காயம் – நுவான் துஷாராவும் விலகினார்.

நேற்றிரவு (24) பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் உபாதையால் இலங்கை கிரிக்கெட் அணியின் வேக பந்து வீச்சாளர் நுவான் துஷாரா, இந்திய தொடரில் இருந்து விலகியுள்ளார். அவரது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நுவான் துஷாரவிற்கு பதிலாக டில்ஷான் மதுஷங்க அணியில் இணைந்துள்ளார். அதேநேரம் உபாதை காரணமாக அணியில் இருந்து நீக்கப்படுள்ள துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக அசித பெர்னாண்டோவும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Read More

சிறிய மாற்றங்களை செய்தேன் – சனத் ஜயசூரிய.

தான் பதில் பயிற்றுவிப்பாளராக ஆன பின்னர் தேசிய அணியின் ஒழுக்கம் தொடர்பில் சில சிறிய மாற்றங்களைச் செய்ததாக சனத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே சனத் ஜயசூரிய மேற்கண்டவாறு தெரிவித்தார். பத்திரிக்கையாளர் – “சனத், நீங்கள் பயிற்சியாளராக ஆன பிறகு, வீரர்களின் முடியை வெட்டுமாறும்.. காதணிகளை கழற்றுமாறும் அறிவித்துள்ளதாக அறிந்துள்ளோம்.. அதேபோன்று..டெட்டூவை அகற்றவும் யோசனை உள்ளதா?” சனத் ஜெயசூர்யா – “நாங்கள் சாதாரண விடயங்களைச்…

Read More

காயம் காரணமாக துஷ்மந்த சமீரவுக்கு விளையாட முடியாத சூழ்நிலை.

இந்தியாவுக்கு எதிரான தொடரில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீரவுக்கு விளையாட முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. துஷ்மந்த சமீரவுக்கு ஏற்பட்ட காயமே அதற்குக் காரணம். இந்திய அணி தற்போது 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக இலங்கை வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More

சாதனை படைத்த சமரி அத்தபத்து.

ஆசியக் கிண்ண மகளிர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கும், மலேசிய அணிக்கும் இடையிலான போட்டி தற்போது தம்புள்ளையில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்றது. அந்தப் போட்டியில் இலங்கை அணியின் தலைவி சமரி அத்தபத்து ஆட்டமிழக்காமல் 119 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். 14 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்சர்கள் அடங்கலாகவே சமரி அத்தபத்து  119 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்….

Read More

ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதலாவது இலங்கைத் தமிழர் தர்ஷன் செல்வராஜா

பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஒலிம்பிக் சுடரை இலங்கையரான தர்ஷன் செல்வராஜா பாரிஸில் நேற்று முன்தினம் ஏந்திச் சென்றார். பாரிஸ் 2024 ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் சுடரை ஏந்திச் சென்ற முதல் இலங்கையராக தர்ஷன் செல்வராஜா வரலாறு படைத்துள்ளார் என பிரான்ஸிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளதுடன், இது இலங்கைக்கு பெருமையான தருணம் எனவும் தெரிவித்துள்ளது. பாரிஸ் 2024 ஒலிம்பிக் சுடரை ஏந்திச் செல்வதற்கு தெரிவுசெய்யப்பட்ட புகழ்பெற்ற பிரெஞ்சு பிரஜைகளில் தர்ஷன் செல்வராஜாவும் ஒருவராவார். இப்போட்டிக்காக, கிறீஸின்…

Read More

ஒலிம்பிக் போட்டிகளில் ஹிஜாப் அணிவதற்கு தடை

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் போது முஸ்லிம் பெண்கள் அணியும் ஹிஜாபை பிரான்ஸ் நாட்டு வீராங்கனைகள் அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், பிரான்ஸ் விளையாட்டு அமைச்சர் Amelie Oudea-Castera அத்தகைய முடிவை அறிவித்தார். ஐரோப்பாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினரில் ஒருவராக இருந்தாலும், பெரும்பாலான உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகளில் வீராங்கனைகள் ஹிஜாப் அணிவார்கள். ஆனால், ஐரோப்பாவில் இதுபோன்ற முடிவை எடுத்த ஒரே நாடு பிரான்ஸ் மட்டுமே. இதனால் கடும் விமர்சனங்களும், எதிர்ப்புகளும் கிளம்பும் என்று கூறப்படுகிறது.

Read More

எந்தவொரு மனிதனுக்கும் கடினமான நேரங்கள் வரலாம் – வனிந்து ஹசரங்க.

தம்மீது வீசப்படும் சவால்களை எதிர்கொண்டு எதிர்காலத்திலும் அணிக்காக விளையாட எதிர்ப்பார்த்துள்ளதாக கண்டி அணித்தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார். தம்புள்ளை சிக்ஸர் அணிக்கு எதிரான போட்டியின் பின்னர் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “எந்தவொரு விளையாட்டு வீரருக்கும், எந்த மனிதனுக்கும் அவர்களின் வாழ்க்கையில் கடினமான நேரங்கள் வரலாம். நான் அவர்களை ஒவ்வொன்றாக எதிர்கொள்கிறேன். என்னால் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும். நான் என்ன செய்தேன் என்று…

Read More