Category: சூடான செய்திகள் 1
ரணிலுக்கு ஆதரவளித்த பெரமுனவின் MP முடிவை மாற்றினார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுனவின் காலிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் பிரியதர்சன தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன ரணில்விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்கவேண்டும் வேட்பாளரை நிறுத்தக்கூடாது என கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் கருத்து வெளியிட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரணில் திட்டமிட்டே கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளார் – விமல் வீரவன்ச
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திட்டமிட்டே கட்டுப்பணத்தைச் செலுத்தியுள்ளார். பொலிஸ் மா அதிபர் பதவி தொடர்பிலும் நெருக்கடி நிலைமையே நிலவுகிறது. இதற்கு விரைவான தீர்வு கிடைக்காவிட்டால் வேறு யாராவது நபரின் தலையீட்டினால் ஜனாதிபதித் தேர்தலுக்கு பெரும் இடையூறு ஏற்படுமென்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார். பொலிஸ் மா அதிபர் தொடர்பில் நிலவும் நெருக்கடி நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு கூறியுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஜனாதிபதி மிக அவசரமாக…
ராஜபக்ஷர்களுக்கு நாட்டு மக்கள் தகுந்த பாடத்தை கற்பிப்பார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன ஜனாதிபதி தேர்தலில் தனித்து வேட்பாளரை களமிறக்குவது சிறந்தது.நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய ராஜபக்ஷர்களுக்கு நாட்டு மக்கள் தகுந்த பாடத்தை இம்முறை கற்பிப்பார்கள் என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை (01) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிட்டதாவது, பொருளாதார பாதிப்புக்கு பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ,பஷில்…
கட்சி தீர்மானித்தால் ரணிலை ஆதரிக்கவும் தயார் – மஹிந்த ராஜபக்ஷ
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிக்க தமது கட்சி தீர்மானிக்கும் பட்சத்தில் அதற்கு நான் ஆதரவு வழங்குவேன் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். மேலும் மேற்குறித்த கருத்தானது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். ஊடகவியலாளர் ஒருவர் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷவிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வுக்கு இன்னும் ஆதரவு இருக்கின்றதா ? என கேள்வியை எழுப்பினார். அதற்கு கட்சியே தீர்மானிக்க வேண்டும்….
ஜனாதிபதித் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய 10 வேட்பாளர்கள்
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 10 வேட்பாளர்கள் இதுவரை தமது கட்டுப்பணத்தை வைப்பு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, ரணில் விக்கிரமசிங்க, சரத் கீர்த்திரத்ன, ஓஷல ஹேரத், ஏ.எஸ்.பி. லியனகே, சஜித் பிரேமதாச, பி.டபிள்யூ.எஸ்.கே. பண்டாரநாயக்க, விஜயதாச ராஜபக்ஷ, கே.கே. பியதாச, சிறிதுங்க ஜயசூரிய மற்றும் அஜந்த டி சொய்சா ஆகியோரே இவ்வாறு கட்டுப்பணத்தை வைப்பு செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 21 ஆம்…
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் வியாழேந்திரனின் செயலாளர் கைது.
இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் தனிப்பட்ட செயலாளரும் மற்றுமொரு அரசியல் செயற்பாட்டாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் மட்டக்களப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பொலன்னறுவையைச் சேர்ந்த வர்த்தகர் ஒருவரின் முறைப்பாட்டின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் தன்னிடம் 15 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரியதாக குறித்த வர்த்தகர் முறைப்பாடு அளித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் – ஆதரவுக் கணிப்பில் சஜித் பிரேமதாச முன்னணியில்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் ஆதரவு தொடர்பில் சுகாதாரக் கொள்கை நிறுவகம் (IHP) நடத்திய ஆய்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று (01)வரை முன்னிலையில் உள்ளார். இதன்படி ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு 43 சதவீத ஆதரவு கிடைத்து முன்னணியில் உள்ளார். தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 30 சத வீதமான ஆதரவு இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளதாக சுகாதார கொள்கை நிறுவகம்…
ஜனாதிபதி ரணிலுக்கு பிரதமரின் கட்சி ஆதரவு
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி தீர்மானித்துள்ளது. கட்சியின் மத்திய குழு 01ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் கூடிய போது இந்த தீர்மானம் ஏகமனதாக எட்டப்பட்டதாக பிரதமர் தினேஷ் குணவர்தன மேலும் தெரிவித்தார். மக்கள் ஐக்கிய முன்னணி மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மொட்டுக்கட்சி வேட்பாளர் யார் ? 7ஆம் திகதி அறிவிப்பு வருமாம்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளின் கூட்டம் இன்று (01) இடம்பெற்றது. கொழும்பு, நெலும் மாவத்தையில் உள்ள கட்சி அலுவலகத்தில் இக்கூட்டம் இடம்பெற்றது. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகள் எவ்வாறு பங்களிப்பு செய்வது என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதித் தேர்தலில் சஜித் முன்னிலையில் இருக்கிறார் – நாமல் தெரிவிப்பு.
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாஸ அவர்களே தற்போதைக்கு முன்னிலையில் இருக்கிறார்” என, பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முதன் முறையாக பகிரங்கமாக ஏற்றுக் கொண்டுள்ளதுடன், அதனை அறிவித்துள்ளார். அத்துடன், “எமது பிரதான எதிர்த்தரப்பு சஜித் பிரேமதாஸ அவர்களே. எம்மிடமிருந்து பிரிந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்ல” என்றும், பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பாராளுமன்றத்தில் கிரிக்கெட் விளையாட்டு தொடர்பாக கருத்துக்களை முன்வைத்தமை குறித்து, நாமல்…