ஆத்மீகத்தை ஆக்கிரமிக்கும் சிந்தனைச் சுதந்திரம் ?

-சுஐப்.எம்.காசிம்- (UTVNEWS | COLOMBO) – முஸ்லிம் விவாகம்,விவாகரத்துச் சட்டம், இஸ்லாமிய ஷரீஆச்சட்டம், புர்கா,நிகாப் உள்ளிட்ட இஸ்லாத்தின் நேரடிக் கட்டளைகளுக்கு உட்பட்டுள்ள இவ்விடயங்களில் முஸ்லிம்களின் ஆத்மார்த்த நம்பிக்கைகள் வேள்வித்தீயில் புடம் போடப்படுகின்றன. இவ்விடயங்களை பிறமதத்தவர் விமர்சனம் செய்யும் நிலைமைகள்,ஒருபடி மேற்சென்று முஸ்லிம் சமூகத்துக்குள்ளிருந்தும் சிலரால் விமர்சிக்கப்படுகிறது. இது முஸ்லிம் சமூகத்தின் மத நம்பிக்கைகளில் ஏனையோர் இலகுவாகத் தலையிடும் நிலையை ஏற்படுத்தியதே பெரும் கவலை. இவ்விடயங்களே முஸ்லிம் சமூகத்தில் பாரிய உணர்வலைகளைத் தெறிக்க வைத்துள்ளன. அவசரகாலச் சட்டத்தில் தற்காலிகமாகத்…

Read More

வேட்டுக்கள் விழும் விடுதலைச் சமூகங்களின் வசந்த வாசல்கள் 

சுஐப் எம். காசிம் சகோதர சமூகத்தின் அரசியல் களப்பார்வைகள் காவலனில்லாத மாளிகைக்குள் ஆசாமிகள் நுழையும் உணர்வை எனக்குள் ஏற்படுத்தி உள்ளது. புலிகள் இல்லாத தமிழ்ச் சமூகத்தின் அரசியல் தலைமைகள் திசைமாறிப் பயணித்து விடுமோ? இந்தப்பயணம் வேற்றுமைக்குள்ளும் ஒற்றுமை தேடும் தமிழ் மொழிச் சமூகங்களின் ஆசை, அபிலாஷை, அவாக்களை அழித்துவிடுமோ என்ற ஆதங்கத்தையும் வடக்கு,கிழக்குச் சமூகங்கள் மத்தியில் ஏற்படுத்தியே உள்ளது. இவ்வாறு முஸ்லிம் தலைமைகளை வழிநடத்த ஒரு புறச்சக்தி இல்லாதிருந்த நிலையை, ஈஸ்டர் தினத் தாக்குதலுக்குப் பின்னால் எழுந்த…

Read More

தடம் புரளும் தர்மத் தேர்

(UTV|COLOMBO) – இலங்கைச் சிறுபான்மை சமூகங்கள் குறிப்பாக முஸ்லிம்கள் தேசப்பற்றிலிருந்து திட்டமிட்டு தூரமாக்கப்படும் சாட்சியங்கள் நாளாந்தம் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. போருக்குப் பிறகு கிடைத்த நிம்மதியும் அமைதியும் தேரவாத மேலாண்மையின் வளர்ச்சிப்படிக்கு உதவியுள்ளதையே 2010 லிருந்து அவதானிக்கப்பட்டு வரும் உண்மைகள். சிங்கள மொழிக்கும் ஆரியப் பரம்பலுக்கும் வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற விடுதலைப் போர் ஆபத்தாகுமென்ற இவர்களின் கவலையைத் தீர்த்து வைத்த பெருமை மஹிந்தவுக்கு மட்டுமே உரியதென்பதும் இவர்களின் நிலைப்பாடு. இந்த நிலைப்பாடுகளை நிறுத்தி அமைக்கப்படும் புதிய ஆட்சியில் பௌத்தத்திற்கு மாத்திரம் முன்னிலை வழங்கி…

Read More

அதிகாரச்சமரின் ஆடுகளங்கள்

(UTV|COLOMBO) – அரசியல் கட்சிகளின் நகர்வுகள் தேர்தல்காலத்தை கண்களுக்கு காட்சிப்படுத்துகிறது. மூன்று தேர்தல்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ள, இன்றைய சூழலில் ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுன தவிர வேறு கட்சிகள் எதுவும் எல்லாத் தேர்தல்களுக்கும் தயாரில்லை. வௌ்ளோட்டத்துக்கும் வெற்றிவாய்ப்புக்கும் பொருத்தமான தேர்தலை எதிர்நோக்கவே ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசிய கட்சி, ஜே.வி.பி என்பன விரும்புகின்றன. உள்ளூராட்சித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவுக்கு கிடைத்த வெற்றி, ஏனைய கட்சிகளின் இமேஜில் பெரும் சரிவை ஏற்படுத்தினாலும் அந்தச் சரிவை நிமிர்த்திவிட்டோமா? இல்லையா?…

Read More

மனச்சாட்சியின் விளிம்பில் விழும் நீதியின் நிழல்கள்

(UTV|COLOMBO) – மனச்சாட்சிகளின் கண்களைத் திறந்த பாராளுமன்றத் தெரிவுக்குழு விசாரணைகள், முடிந்த பின்னும் சிலரின் மனநிலைகள், பழைய பிடிவாதத்திலிருந்து தளர மறுக்கின்றன. இல்லாத குற்றங்களுக்காக எவரையும் தண்டிக்க முடியாது. நாட்டின் எதிர்காலம் சிங்களவர்களுக்கு மட்டுமே என்ற நிலைப் பாட்டில் உள்ளோரே ,அப்பாவிகளைக் காப்பாற்றும் இந்த தர்மத்தைத் தகர்த்தெறியப் புறப்பட்டுள்ளனர், உளவுத்துறை, பாதுகாப்புத் துறை,சட்டத்துறை உள்ளிட்ட நாட்டின் சகல துறைகளிலும் இவர்களின் சந்தேகப் பார்வைகள் நுழைந்துள்ளதால், அரச இயந்திரத்தை முன்னெடுத்துச் செல்வதில் பெரும் சிக்கலைத் தோற்றுவித்துள்ளது. எத்தனை தடவைகள்…

Read More

கடும்போக்கின் சுற்றிவளைப்புக்குள் சிறுபான்மைப் பெரு நிலம்

(UTV|COLOMBO)  துருவப்படும் வடக்கு, கிழக்கு சமூகங்களின் உறவுகள், சிறுபான்மையினரின் எல்லைகளை வளைத்துப் போடுவதற்கு தெற்கின் கடும்போக்குக்கு வாய்ப்பளித்துள்ளது.வெற்றி பெறாது வீழ்த்தப்பட்ட விடுதலைப் போரும், துரதிஷ்டமாக நடத்தப்பட்ட ஐ.எஸ் தாக்குதலும் வடக்கு, கிழக்கு மாகாணங்களை பயங்கரவாதத்தின் உறைவிடமாகக் காட்டுவதற்கான சந்தர்ப்பத்தையும் உருவாக்கி வருகிறது அல்லது சிலரால் இது உருவாக்கப்பட்டு வருவதாகவும் கூறலாம். பிரபாகரனின் வல்வெட்டித்துறையும், சஹ்ரானின் காத்தான்குடியும் பிரிவினைவாதம், மதவாதத்தின் பிறப்பிடங்கள் என்ற சிங்களத்தின் பார்வை. வடக்கு – கிழக்கு மண்ணை தொடர்ந்தும் சந்தேகிக்கத் தூண்டி உள்ளது. இதனால்…

Read More

சிறுபான்மையைத் துண்டாடும் திருகுதாளங்கள்

(UTV|COLOMBO)  முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ள நேர்ந்த நெருக்கடிகள்,அச்சுறுத்தல்களுக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் எடுத்திருந்த தீர்மானம், பிற சமூகங்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்த போதிலும் சில விடயங்களில் இது அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதிகாரத்தில் இருந்த காலத்தில் சாதிக்காததையும் சாதித்துள்ளது. இதனால் முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவு தொடர்ந்து நிலைக்க வேண்டுமென சமூகத்தின் அடிமட்டத் தொண்டர்கள் முதல் புத்திஜீவிகள் வரை உணரப்படுகிறது. எனினும் இந்தச் சமூக ஒன்றிப்பில் தென்னிலங்கை முஸ்லிம் பிரதிநிதித்துவங்கள் தொடர்ந்தும் நிலைக்க முடியாததையும் அவதானிக்க முடிகிறது. தேசிய கட்சிகளிலிருந்து…

Read More

அரசன் அன்று அறுப்பான் தெய்வம் நின்று அறுக்கும்

(UTV|COLOMBO)  நாட்டில் அடிக்கடி தொடர்ந்து வரும் இனக்கலவரங்களால் மக்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது அதனால் முஸ்லிம்கள் இன்று பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர் இந்த நிலை இனிமேலும் தொடரக் கூடாது சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற நோக்குடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் முன்னாள் அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் தனது அரசியலை செய்து சகல இன மக்களின் பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து வருகின்றார் அதனால் மக்கள் அல்ல அரசியல்…

Read More

பெருந்தேசியத்துக்குள் – புதைக்கப்படும் சிறுபான்மைக்குரல்கள்!

(UTV|COLOMBO) சிங்கள முஸ்லிம் உறவுகளின் கடந்தகால நினைவுகளில் சஞ்சரிக்கையில்,இன்றைய நிலவரங்கள்  கவலை தருகின்றது . அடிக்கடி தளம்பும் நீர்க்குமிழி போல் இந்த உறவு உருவெடுத்ததற்கு யார் காரணமென,யாரைக் கேட்பதென்ற ஆதங்கமும் எனக்குள் இன்னும் அடங்கவில்லை. பயங்கரவாதம்,அடிப்படைவாதம்,தீவிரவாதம், மதவாதம், கடும்போக்குவாதம் போன்ற எல்லா வாதங்களையும் எடுத்தெறிந்து விட்டு மனிதாபிமானம் வாழ,வழியமைப்பது யார்? அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்திற்குப் பின்னர்,உக்கிரமடைந்துள்ள அதிகார மோதல்களு க்குள் உயிர்பிழைக்கும் இந்த அத்தனைவாதங்க ளும் மனிதாபிமானத்தை மட்டும் மரணிக்கச் செய்கிறதே!  ஏன்? ஆளும் வர்க்கத்தினரின்…

Read More

கூட்டுப்பலமே கடும்போக்கிற்கு வேட்டு

(UTV|COLOMBO) பௌத்த நாடு என்ற வகையில் இலங்கை அரசாங்கத்துக்கு வழிகாட்டும் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளுக்கு அழுத்தம் கொடுக்கும் பௌத்த உயர் பீடங்களின் பணிகளை ஏனைய சிறுபான்மைச் சமூகங்களும் பெருந்தன்மையுடன் ஏற்றுள்ளன. இப்பணிகளையும் தாண்டி, அரசியலைத் தீர்மானிக்கின்ற ஆட்சிக்கு வரவேண்டிய கட்சிகளைத் தெரிவு செய்கின்ற, பொறுப்புக்களையும் இவ்வுயரிய பௌத்த பீடங்கள் பொறுப் பேற்றுள்ளனவா என்ற அச்சம் இலங்கை மீதான வெளிநாடுகளின் பார்வையிலும் சந்தேகங்களைத் தோற்றுவித்துள்ளது. பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பௌத்த மதகுரு ஒருவர் அரசியல் நிகழ்ச்சிக்காக அனுஷ்டித்த உண்ணாவிரதத்தை,…

Read More