பணியை முடிக்க தவறினால் சிறுநீர் பருக வேண்டும்?

(UTV|CHINA)-சீனாவில் இயங்கும் தனியார் நிறுவனம் ஒன்று, தொழில்ரீதியான இலக்குகளை எட்ட தவறிய ஊழியர்களை சிறுநீர் குடிக்க வைத்தும், கரப்பான்பூச்சிகளை சாப்பிட வைத்தும், சாட்டையால் அடித்தும் கொடுமைப்படுத்தியுள்ளது தெரிய வந்துள்ளது.

பெய்ஜிங் மாகாணத்தை தலைமை இடமாக கொண்டு இயங்கும் வீட்டை சீரமைக்கும் நிறுவனம் ஒன்று, தொழிலாளர்களை பல்வேறு வகையில் கொடுமைப்படுத்துவதாக சமூகவலைதளங்களில் தகவல் வெளியானது.

குயிஜாவூ மாகாணத்தின் இயங்கும் ஊடகம் ஒன்று, இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை செய்து செய்தி வெளியிட்டுள்ளது. அதில் அந்த நிறுவனம் தொழிலாளர்கள் மீது தொடுக்கும் வன்முறை சார்ந்த விஷயங்கள் வெளிவந்துள்ளன.

போட்டிகளை சமாளிக்க முடியாத ஊழியர்கள் கழிவறைக்கு சென்று, அங்கு யூரினல்லிருந்து நேரடியாக சிறுநீரை குடிக்க வேண்டும். மேலும், கரப்பான்பூச்சிகளை பச்சையாக பிடித்து சாப்பிட வேண்டும். மேலும் சம்பளத்தை தராமல் இழுத்தடிப்பது மற்றும் தலையை மொட்டை அடிப்பது போன்ற கொடுமைகளும் அங்கு நடந்துவந்துள்ளன.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *