இஸ்ரேல் -பலஸ்தீன மோதலில் 8 பேர் உயிரிழப்பு

காஸா எல்லையில் இஸ்ரேலிய படைகளுக்கும் பலஸ்தீன ஆயுதக்குழுக்களுக்கும் இடையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை இரவு முதல் இதுவரை பலஸ்தீன ஆயுதக் குழுக்களால், இஸ்ரேலை நோக்கி 460க்கும் அதிக ரொக்கெட் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதற்குப்பதிலாக, பலஸ்தீனின் 160 இராணுவ நிலைகள் மீது, இஸ்ரேல் விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல்களில் 7 பலஸ்தீன ஆயுததாரிகளும் ஒரு சிவிலியனும் கொல்லப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இருதரப்பினருக்கும் இடையே போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக எகிப்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்ததாக பலஸ்தீன ஆயுதக்குழுக்கள் தெரிவித்துள்ளன.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *