அமெரிக்காவில் 8 வயது சிறுவனுக்கு ஆண்டு வருமானம் ரூ.155 கோடி

(UTV|AMERICA)-அமெரிக்காவைச் சேர்ந்த 8 வயது சிறுவனின் ஆண்டு வருமானம் ரூ.155 கோடியாக உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு 500 ரூபாய் சம்பாரிக்க பல கடினமான வேலைகளை பார்த்துவரும் மக்களுக்கு இடையே ஆறே வயதான ரியான் என்ற சிறுவன் தனது பொம்மைகளை மதிப்பீடு செய்யும் வீடீயோவை பிரபலமான யூடுயூப்பில் அப்பிளோடு செய்ததின் மூலம் ஒரு வருடத்தில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமான பணத்தை அச்சிறுவன் ஈட்டியுள்ளான்.

அமெரிக்காவைச் சேர்ந்த ரியான் என்ற சிறுவன், ஒரு பொம்மை வாங்குவதற்கு முன்பும் அதன் மதிப்பீடு பற்றி ஆராய்ந்த பின்பே அதனை வாங்குவார். இதனையடுத்து பெற்றோர் உதவியுடன் கடந்த மார்ச் மாதம் 2015-ம் ஆண்டு ரியான் டாய்ஸ் ரிவியூவ் என்ற யூடியூப் சேனலை தொடங்கினான். ஆரம்பத்தில், ரியனின் காணொளி பிரபலமடையவில்லை ஆனாலும் ரியான் மற்றும் அவனது பெற்றோர்கள் விடாமுயற்சியாக தினந்தோறும் ஒரு காணொளியை பதிவேற்றம் செய்தனர். இதனையடுத்து குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்களை விமர்சனம் செய்ததன் மூலம் ரியான் பிரபலம் ஆனான்.

ஜூலை 2015 ஆம் ஆண்டு பதிவேற்றம் செய்யப்பட்ட   ரியனின் ‘ஜியன்ட் எக்க் சர்ப்ரைஸ் என்ற காணொளி  இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவை இதுவரை 800 மில்லியன் மக்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர். இந்நிலையில் இந்த சேனலை இதுவரை ஒருகோடியே 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இதன்மூலம் 2017-2018-ம் ஆண்டில் வரிக்கு முந்தைய வருமானமாக 155 கோடி ரூபாயை ஈட்டியுள்ள ரியான், யுடியூப்பில் அதிகம் சம்பாதிப்போருக்கான போர்ப்ஸ் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளான்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *