பலாங்கொடை மாணவர் மற்றும் ஆசிரியருக்கு பிணை

(UTV|COLOMBO)-பலாங்கொடையில் கைது செய்யப்பட்ட சாதாரண தர பரீட்சையில் கைப்பேசியை பயன்படுத்திய மாணவர் மற்றும் அவருக்கு உதவி புரிந்த ஆசிரியர் ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது , ஒருவருக்கு தலா 2 இலட்சம் ரூபாய் சரீர பிணை அடிப்படையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபரான ஆசிரியர் அப்பிரதேசத்தின் பாடசாலையொன்றில் பணிபுரியும் நிலையில் , 20 வயதுடைய தனியார் விண்ணப்பதாரரான மாணவர் நான்காவது தடவையாக ஆங்கில பாடத்திற்காக இவ்வாறு தோற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *