நைஜீரியா நாட்டின் முன்னாள் ராணுவ தளபதி சுட்டுக்கொலை

(UTV|NIGERIA)-நைஜீரியா நாட்டின் விமானப்படை மற்றும் ராணுவ தளபதியாக பதவி வகித்தவர் அலெக்ஸ் படேஹ். 2012-ம் ஆண்டு அக்டோபர் மாதம் விமானப்படை தளபதியாக பதவியேற்ற இவர், பின்னர் முப்படைகளின் தளபதியாக 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். 13-7-2015 அன்றுவரை இந்த பதவியில்இருந்தார்.

பணி ஓய்வு பெற்ற நிலையில் தனது பண்ணையில் இருந்து நேற்று மாலை காரில் சென்றபோது அபுஜா-கெஃபி நெடுஞ்சாலையில் அவரது காரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் அலெக்ஸ் படேஹ்-வை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும், இந்த தாக்குதலில் மேலும் இருவர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *