(UTV|AMERICA)-ஐக்கிய அமெரிக்காவின் கிரிக்கட் ஒழுங்கமைப்பு, தமது 105வது அங்கத்துவ அமைப்பாக சர்வதேச கிரிக்கட் பேரவை அறிவித்துள்ளது.
சர்வதேச கிரிக்கட் பேரவை நேற்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
முழுமையான ஒத்துழைப்புகளை வழங்காத நிலையில், 2017ம் ஆண்டு அமெரிக்க கிரிக்கட் ஒழுங்கமைப்பு, சர்வதேச கிரிக்கட் பேரவையின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.
இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பாரிய முயற்சிகளின் விளைவாக தற்போது அமெரிக்கா சர்வதேச கிரிக்கட் பேரவையின் 105வது உறுப்பு நாடாக இணைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள அனைத்து கிரிக்கட் விளையாடும் அமைப்புகளையும் ஒன்றிணைப்பதே தங்களின் நோக்கம் என்று அமெரிக்க கிரிக்கட் ஒழுங்கமைப்பின் தலைவர் பராக் மராத்தே தெரிவித்துள்ளார்.