சுரக்ஸா காப்புறுதி தொடர்பில் கல்வியமைச்சின் விசேட அறிவிப்பு

(UTV|COLOMBO)-சுரக்ஸா காப்புறுதி வேலைத்திட்டத்தின் கீழ் நன்மைகளை பெற விரும்பும் மாணவர்கள், விண்ணப்பங்களை கல்வியமைச்சிற்கு நேரடியாக அனுப்புமாறு அந்த அமைச்சு கோரியுள்ளது.

2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள சுரக்ஸா காப்புறுதி திட்டத்திற்காக முன்னிலையான காப்புறுதி நிறுவனத்தின் உன்படிக்கையின் கால எல்லை டிசம்பர் முதலாம் திகதியுடன் முடிவடைந்தமையினால் புதிய நிறுவனத்துடன் உடன்படிக்கையை ஏற்படுத்தும் வரை குறித்த நன்மைகள் கல்வியமைச்சின் ஊடாக வழங்கப்படவுள்ளது.

இது குறித்த அனைத்து விண்ணப்பமும் கல்வி பணிப்பாளர், குடும்ப சுகாதார மற்றும் ஊட்டச்சத்து கிளை, கல்வியமைச்சு, இசுரப்பாய, பத்தரமுல்லை என்ற முகவரிக்கு அனுப்ப முடியும்.

இதனுடன் 0112784163 என்ற தொலைபேசி இலக்கம் ஊடாக சுரக்ஸா காப்புறுதி குறித்த மேலதிக விபரங்களை அறிந்து கொள்ள முடியும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *