(UTV|COLOMBO) தற்போதைய கிரிக்கட் விளையாட்டு வீரர்கள் முழு அளவில் வர்த்தக ரீதியாக செயல்படுவதாக இலங்கை அணியின் முன்னாள் சுழல் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சமூகம் மாறி வருவது போல கிரிக்கட் ஆட்டக்காரர்களும் மாறி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய துடுப்பாட்டக்காரர்கள் தடுப்பு யுக்திகளை உரிய முறையில் மேற்கொள்ள தவறியுள்ளனர்.
இந்தியாவின் பிரபல ஊடகமான ‘த இந்து’ வின் காரியாலயத்திற்கு நேற்று விஜயம் செய்த அவர் இந்த கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.
தமது கிரிக்கட் திறமையினை மேம்படுத்துவதற்கு, சர்வதேச ரீதியாக மிகத் திறமை வாய்ந்த 20 கிரிக்கட் வீரர்களுடன் விளையாடியதன் மூலம் வசதி வாய்ப்புக்கள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார்.
இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க ஏனைய வீரர்களை காட்டிளும் தனித்துவமான பந்துவீச்சு திறனை கொண்டவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கட்ட அணியின் வெற்றிக்கு கிரிக்கட் ஆட்டக்காரர்களின் உடல் தகுதி முக்கியமானது.
தற்போதைய இந்தய அணியின் தலைவர் விராத் கோலி அந்த தகுதியை பெற்றுள்ளதுடன் சிறந்த முறையில் அதனை பிரயோகிப்பதாகவும் முத்தையா முரளீதரன் குறிப்பிட்டுள்ளார்