உயிரியல் பூங்காவில் சிங்கத்துடன் விளையாடும் பார்வையாளர்கள்

(UTV|PALESTINE) பலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் பராமரிக்கப்படும் சிங்கம், பார்வையாளர்களுடன் நன்கு விளையாடி, சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

மிகவும் ஆபத்தான சிங்கங்களை, உயிரியல் பூங்காவில் பராமரித்து, அவற்றுடன் பழகுவது மிகவும் கடினம். ஆனால், பாலஸ்தீனத்தின் கசா பகுதியில் உள்ள வனவிலங்கு பூங்காவில் சிங்கத்தை மனிதர்களுடன் விளையாடும் அளவுக்கு பயிற்சி கொடுத்துள்ளனர்.

இந்த பூங்காவில் பார்வையாளர்கள் சிங்கத்துடன் விளையாட அனுமதிக்கின்றனர். இதற்காக ஃபாலஸ்டைன் என்ற 14 மாத பெண் சிங்கத்தை தயார்படுத்தி உள்ளனர். மனிதர்களுடன் விளையாடும்போது பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதற்காக, அதன் கூரிய நகங்கள் வெட்டப்பட்டுள்ளன.

சிங்கத்தின் ஆக்ரோஷமான குணம் பயிற்சியின் மூலம் குறைக்கப்படுவதாகவும், இதனால் அனைத்து பார்வையாளர்களுடனும் நன்றாக பழகி வருவதாகவும் பூங்காவின் உரிமையாளர் முகமது ஜுமா தெரிவித்தார்.

பூங்காக்களுக்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவே இவ்வாறு சிங்கத்திற்கு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

நேற்று அந்த சிங்கத்தினை அருகிலுள்ள குடியிருப்பு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த பகுதியில் விலங்குகளுக்கென சிறப்பு மருத்துவமனை இல்லை எனவும், சரியான பராமரிப்பு வழங்க முடியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *