எமது பிரதமர் தெட்டத் தெளிவாக பேசியிருப்பது காதுகளுக்கு கேட்கவில்லையா?

(UTV|PAKISTAN) இந்திய இராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் தொடர்பில் பாகிஸ்தான் பிரதமர் தெட்டத் தெளிவாக பேசியிருப்பதாக, பிரபல கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிடி தனது கருத்தினை டுவிட்டர் தளத்தில் ஊடாக பதிவிட்டுள்ளார்.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுமார் 40 இந்திய ராணுவ வீரர்கள் பலியானதற்கு பாகிஸ்தான் காரணம் அல்ல என, அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருந்த போதிலும், குறித்த தாக்குதலுக்கு காரணம் பாகிஸ்தானில் செயல்படும் ஜெய்ஷ்-இ-முகம்மது அமைப்புதான் என்றும், அவர்களுடைய சதி வேலை என்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தான் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கடுமையாக குற்றம் சுமத்தி வருகின்றார்.

மேலும், இதில் சம்மந்தப்பட்ட பயங்கரவாதிகள் பதில் கொடுத்தே ஆக வேண்டும் எனவும், நிச்சயமாக தாக்குதல் நடத்தப்படும் எனவும் பிரதமர் தெரிவித்திருந்தார்.

ஆனால் இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் பிரதமர், விரைவில் இந்தியாவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்காகவே இப்படிபட்ட வேலைகளை செய்து விட்டு பாகிஸ்தான் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

அப்படி பாகிஸ்தான் செய்திருந்தால், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பியுங்கள் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியிருந்ததாக தமது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *