பல்கலைக்கழக மாணவ இரு குழுக்களுக்கு இடையில் மோதல் ; 4 மாணவர்கள் மருத்துவமனையில்

(UDHAYAM, COLOMBO) – பொரளை பிரதேசத்தில் பல்கலைக்கழக மாணவ இரு குழுக்களுக்கு இடையில் நேற்றைய தினம் மோதல் ஒன்று இடம்பெற்றது.

குறித்த மோதலின் போது 4  மாணவர்கள் காயமடைந்துள்ள நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆனந்த ராஜகருணா மாவத்தை பிரதேசத்தில் குறித்த மோதல் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

பொரளை காவற்துறை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *