முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சின் கீழ் மாபெரும் நடமாடும் சேவை

(UTV|COLOMBO) முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் அவர்களின் ஆலோசனையின் கீழ் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சு மற்றும் முஸ்லிம் சமயம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் உடுநுவர மற்றும் யட்டிநுவர ஆகிய இரு தேர்தல் தொகுதிகளை ஒன்றிணைத்து நடத்தும் மாபெரும் நடமாடும் சேவை எதிர்வரும் 02-03-2019 ஆம் திகதி தவுலகல வஹங்கே அல் அறபா மஹா வித்தியாலயத்தில் மு. ப 9. 30 மணி முதல் பி. ப 3.00 மணி வரை இடம்பெறவுள்ளதாக முஸ்லிம் சமயம் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம். ஆர். எம். மலீக் தெரிவித்தார்.

அவர் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில்
இரண்டு தொகுதிகளிலுள்ள குர்ஆன் மத்ரஸாக்கள், அரபுக் கல்லூரிகள், தைக்காப் பள்ளிவாசல்கள், ஜும்ஆப் பள்ளிவாசல்கள் போன்ற பதிவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குதல், புதிய பதிவுகள் மேற்கொள்ளல், பதிவு செய்யப்படால் உள்ளதை மீள் பரிசீலனை செய்தல் போன்ற முஸ்லிம் சமய கலாசார விவகாரங்களுடன் தொடர்புடைய சகல பிரச்சினைக்கும் நடமாடும் சேவையின் மூலம் தீர்வுகள் பெற்றுக் கொடுப்படும்.

இந்த பிரதேசத்திலுள்ள மக்கள் அனைவரும் கலந்து பயன்பெறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக பணிப்பாளர் எம். ஆர். எம். மலீக் மேலும் தெரிவித்தார்.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *