மகனை நிர்வாணப்படுத்தி சித்திரவதை செய்த தாய்…

(UTV|INDIA) இந்தியா, மகாராஷ்டிரா மாநிலத்தில் விவாகரத்தான மனைவி தனது கணவரிடம் அதிக அதிகமான பராமரிப்பு தொகை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக தனது 3 வயது மகனை நிர்வாணப்படுத்தி கொடூரமாக தாக்கி அதனை வீடியோ எடுத்து தனது கணவருக்கு அனுப்பியுள்ளார். இச்சம்பவம் இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பையாஸ் சேக் – ஹீனா தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகன் இருக்கிறான். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட இவர்கள் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து கொண்டனர்.

மகனை பராமரிப்பதற்காக பையாஸ் சேக் மாதந்தோறும் ஹீனாவிற்கு ரூ.6000 அனுப்பி வந்துள்ளார். இந்நிலையில் இந்த தொகை போதவில்லை என்பதற்காக ஹீனா, தனது மகனை கொடூரமாக தாக்கி அதனை வீடியோ எடுத்து கணவருக்கு அனுப்பி வைத்துள்ளார்.

3 வயது மகனை நிர்வாணப்படுத்தி கரண்டியை வைத்து கொடூரமாக தாக்கியுள்ளார். வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த கணவர், உடனடியாக சம்பவம் குறித்து ஹீனா மீது பொலிசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் பொலிசார் ஹீனாவை அதிரடியாக கைது செய்துள்ளதுடன், அவர் மீது சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் 75-வது பிரிவின் (சிறுவர்களுக்கு எதிரான சித்திரவதை) கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடதக்கது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *