2016ல் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு 11 பில்லியன்கள் இலாபம்

(UDHAYAM, COLOMBO) – 2016ம் ஆண்டில் இலங்கை துறைமுக அதிகாரசபை ரூபாய் 11 பில்லியன்கள் இலாபமிட்டியுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்தார்.

துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் கேட்போர்கூடத்தில் நேற்று நடைப்பெற்ற ஊடகவியலாளர் மகாநாட்டில் வருடாந்த முன்னேற்ற அறிக்கையினை உத்தியோகப்பூர்வமாக வெளியிட்டபோது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த அறிக்கை தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நூற்றிற்கு 83 வீத வளர்ச்சியாகும் என்றும் பல்வேறுப்பட்ட சவால்களிற்கு மத்தியிலேயே இவ்வெற்றியை ஈட்டிக்கொண்டதாக சுட்டிக்காட்டினார்.

கடந்த ஆண்டு இலங்கை துறைமுக அதிகாரசபை பெற்றுக்;கொண்ட இலாபம் ரூபாய் 44 பில்லியன்களாகும். இந்த வருமாணத்தில் செயற்பாடுகள் செலவு, நிர்வாக செலவு, கடன் வட்டி மற்றும் வேறு

செலவுகளை கழித்த பின்னர் கடந்த ஆண்டில் இலங்கை துறைமுக அதிகார சபை ஈட்டிய இலாபம் ரூபாய் 11 பில்லியன்களாகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

2015ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் ரூபாய் 5 பில்லியன்கள் வரையில் அதிகரித்துள்ளது. அதாவது 2015ம் ஆண்டில் இலங்கை துறைமுக அதிகார சபை பெற்றுக்கொண்ட இலாபம் ரூபாய் 6 பில்லியன்களாகும்.

2016ம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் பொருட்டு பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் மற்றும் வட்டி தொகையாக ரூபாய் 7ஆயிரத்து100 மில்லியன்களை செலவிட நேரிட்டது.

2015ம் ஆண்டில் இலங்கை துறைமுக அதிகார சபையின் கொள்கலன்கள் செயற்பாடுகளிற்கான செலவு ரூபாய் 22. 6 பில்லியன்களாகும். 2016ம் ஆண்டில் அது ரூபாய் 20.2 பில்லியன்களால் அதாவது 2.4 பில்லியன்களால் குறைக்க முடிந்துள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

2016ம் ஆண்டில் துறைமுக அனுமதிப்பத்திரம் வழங்கியதன் மூலமாக ரூபாய் 92 மில்லியன்கள் வருமானம் பெற்றுக்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *