(UTV|NEW ZEALAND) நியூசிலாந்து Christchurch நகரில் இரு பள்ளிவாசல்கள் மீது இரு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
பள்ளிவாசல்கள் மீது இருவர் நுழைந்து இவ்வாறு துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளதுடன் 06 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
நியூசிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள போட்டித் தொடரில் கலந்து கொள்ளவே பங்களாதேஷ் அணியானது நியூசிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் நிகழும் போது பங்களாதேஷ் அணியானது காலை வணக்கத்தினை பூர்த்தி செய்து பள்ளிக்கு அருகாமையில் உள்ள பூங்காவில் இருந்துள்ள நிலையில் அவர்கள் அங்கிருந்து பாதுகாப்பாக தப்பிச் சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Bangladesh team escaped from a mosque near Hagley Park where there were active shooters. They ran back through Hagley Park back to the Oval. pic.twitter.com/VtkqSrljjV
— Mohammad Isam (@Isam84) March 15, 2019