பப்ஜி கேம் விளையாடிய இருவரின் நிலை?

(UTV|INDIA) உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள மக்கள் ஆன்லைன் கேமிற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். இந்த ஆன்லைன் கேம்கள் பெரியவர்கள் , சிறியவர்கள் என அனைத்து வயதினரையும் ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் அடிமையாக்கியும் உள்ளது.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் உள்ள ஹிங்கோலி பகுதியில்  கடந்த சனிக்கிழமை அன்று, புகையிரத தண்டவாளத்திற்கு அருகே நாகேஷ் கோர்(24), சுவப்னில் அன்னப்பூர்ணே(22) ஆகியோர் பப்ஜி கேம் விளையாடியுள்ளனர். அப்போது  ஐதராபாத்தில் இருந்து அஜ்மீர் செல்லும் புகையிரதம் வந்துள்ளது. இதனை கவனிக்காமல் தொடர்ந்து விளையாட்டில் தீவிரம் காட்டியுள்ளனர்.  இதனால் புகையிரதத்தில் அடிபட்டு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இவர்களது சடலங்களை அப்பகுதியில் வசிக்கும் மக்கள் நள்ளிரவு கண்டறிந்து, பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், சடலங்களை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பப்ஜி என்பது மிகவும் ஆபத்தான ஆன்லைன் மல்டிபிளேயர் கேம் ஆகும். இதில் 100 வீரர்கள் போர்க்களத்தில் போராட வேண்டும். இதில், ஒருவர், இருவர், நால்வர் என எண்ணிக்கையில் அணி அணியாக சேர்ந்து விளையாடலாம். இறுதியாக உயிர்தப்புபவர் வெற்றி பெறுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *