7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை தம் வசமாக்கிய ராஜஸ்தான் ரோயல்ஸ்

(UTV|INDIA) ஐ.பி.எல் தொடரில் நேற்று இடம்பெற்ற 14வது போட்டியில் ரோயல் செலஞ்ஜர்ஸ் பெங்களுர் அணியை எதிர்கொண்ட ராஜஸ்தான் ரோயல் அணி 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

அதற்கமைய முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்ஜர்ஸ் பெங்களுர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களை பெற்றது.

பதிலளித்தாடிய, ராஜஸ்தான் ரோயல் அணி 19.5 ஓவர்கள் நிறைவில், 3 விக்கட்டுக்களை இழந்து 164 ஓட்டங்களை பெற்று வெற்றி இலக்கை கடந்தது.

அந்த அணி சார்பாக ஜோஸ் பட்லர் 59 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார்.

இதற்கமைய , ரோயல் செலஞ்ஜர்ஸ் பெங்களுர் அணி பங்குபற்றியுள்ள நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *