பண்டிகை காலத்தை முன்னிட்டு மேலதிக வீதிகளை அமுல்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)அதிவேக நெடுஞ்சாலைகளில், பண்டிகைக் காலத்தை முன்னிட்டு  உள்நுழைவுகள் மற்றும் வௌியேற்றங்களுக்காக மேலதிக வீதிகளை அமுல்படுத்துவதற்கு, வீதி அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

அதேவேளை ஒரு மணித்தியாலத்தில் உள்நுழையும் மற்றும் வௌியேறும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உத்தேசித்துள்ளதாக அதிவேக வீதியின் நடவடிக்கை மற்றும் முகாமைத்துவப் பிரிவின் பணிப்பாளர் எஸ். ஓப்பநாயக்க தெரிவித்துள்ளதுடன் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிவேக நெடுஞ்சாலைகளின் பயன்பாடு அதிகரிக்கும் என்பதை கருத்திற்கொண்டு இந்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,தற்போது ஒரு மணித்தியாலத்தில் ஒரு நுழைவாயிலில் நுழையும் வாகனங்களின் எண்ணிக்கை 240 ஆக காணப்படுவதாகவும் அவற்றை 360 ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *