சட்டவிரோத பொலித்தீன் உற்பத்தி நிலையங்களுக்கு எதிராக வழக்கு-மத்திய சுற்றாடல் அதிகார சபை

(UTV|COLOMBO) சட்டவிரோதமாக பொலித்தீன் உற்பத்தியில் ஈடுபடும் 28 உற்பத்தி நிலையங்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு கடந்த மாதம் முதல் 781 இடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பரிசோதனை அதிகாரி என்.எஸ். கமகே தெரிவித்துள்ளதுடன் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 2,282 இடங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், இதுவரையில் சட்டவிரோதமாக பொலித்தீன் உற்பத்தியில் ஈடுபட்ட 177 நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, என்.எஸ். கமகே மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்,சட்டவிரோதமாக பொலித்தீன் உற்பத்தியில் ஈடுபடும் உற்பத்தி நிறுவனங்கள் கொழும்பு, குருநாகல் மற்றும் காலி மாவட்டகளில் அதிகளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *