மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுக்களினால் வெற்றி…

(UTV|INDIA) இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக நேற்றிரவு இடம்பெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றது
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 197 ஓட்டங்களை பெற்றது
ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான கே.எல். ராகுல் ஆட்டமிழக்காமல் 64 பந்துகளில், ஆறு 6 ஓட்டங்கள் ஆறு 4 ஓட்டங்கள் அடங்களாக 100 ஓட்டங்களை அதிகூடுதலாக பெற்றுக்கொடுத்தார்.
இதையடுத்து 198 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலளித்தாடிய  மும்பை இந்தியன்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், 20 ஆவது ஓவரின் இறுதிப் பந்தில் வெற்றி இலக்கை எட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *