மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு இன்று…

(UTV|INDIA) இந்திய மக்களவைத் தேர்தலுக்கான மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு இன்று (23ஆம் திகதி) நடத்தப்படுகின்றது.

7 கட்டங்களாக நடத்தப்பட்டுவரும் இந்தத் ​தேர்தலில் மூன்றாம்கட்ட வாக்குப்பதிவு இன்று, 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களிலுள்ள 116 தொகுதிகளில் நடத்தப்படுகின்றது.

கடந்த 11ஆம் திகதி முதல்கட்டமாக 18 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இரண்டாவது கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 95 தொகுதிகளில் கடந்த 18ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில், மூன்றாவது கட்டத்தில் 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசத்தில் உள்ள 116 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது.

இந்த 116 தொகுதிகளுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *