“அந்த கனவு எப்போது நனவாகும்”?

பிரியங்கா சோப்ரா வாய்ப்பு கிடைக்கும் இடங்களிலெல்லாம் தன்னுடைய திறமையை நிரூபித்துக்கொண்டிருக்கிறார் என்பதற்கு, சமீபத்தில் நடந்து முடிந்த மெட்காலா நிகழ்ச்சியும் ஓர் உதாரணம். கடந்த 2017-ம் ஆண்டு நடைபெற்ற இதே மெட்காலாவில்தான் நிக் ஜோனசை முதல்முறையாகச் சந்தித்திருக்கிறார் பிரியங்கா. தன்னை விட 10 வயது குறைவானஅமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனசை, இவர் காதலித்து திருமணம் செய்துகொண்ட போது, உலகமே அவரைப் பற்றித்தான் பேசியது.

சில தினங்களுக்கு முன்பாக, இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விரைவில் விவாகரத்து பெறப்போகிறார்கள் என்று செய்திகள் வெளியாகின. ஆனால் அதை மறுத்த பிரியங்காவும், நிக் ஜோனசும், `நாங்கள் இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். எங்களுக்குள் பிரியும் எண்ணம் எதுவும் இல்லை’ என்பதைத் தெரிவித்திருந்தார்கள். இதை உறுதிப்படுத்துவது போல் நிக் ஜோனசுடன் நெருக்கமாக இருக்கும் படங்களையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பிரியங்கா சோப்ரா வெளியிட்டார். சமீபத்தில் நடந்து முடிந்த மெட்காலா நிகழ்விலும் கணவன் மனைவியுமாகக் களமிறங்கி அந்த கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் திருமணம் ஆகி இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளவில்லையே என்று சமூக வலைதளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்குப் பிரியங்கா, “குழந்தை பெற்றுக்கொள்ள எனக்கு ஆசை இருக்கிறது. ஆனால் அது கடவுள் நினைக்கும்போதுதான் நடக்கும்” என்று பதில் அளித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *