பிரதமருக்கு எதிராக பொலிஸ் தலை​மையகத்தில் முறைபாடு – தேசிய சங்க சம்மேளனம்

(UTV|COLOMBO) உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிவித்து, அவருக்கு எதிராக தேசிய சங்க சம்மேளனத்தால், இன்று பொலிஸ் தலை​மையகத்தில் முறைபாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது.

மேற்படி தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏலவே தெரிந்திருந்தும் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமை, அரசாங்கம் என்ற ரீதியில் தமது பொறுப்புகளிலிருந்து விலகியிருந்தமை உள்ளிட்ட பல காரணங்களை முன்வைத்து, தேசிய சங்க சம்மேளனத்தின் தலைவர் ரஜவத்தே வப்ப தேரரால், இந்த முறைபாடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *