(UDHAYAM, COLOMBO) – ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது மேற்கொண்டு வரும் விசாரணைகளில் தெரியவந்துள்ள தகவலுக்கு அமையவே இந்த 34 வயதான இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இவர் இராணுவ புலனாய்வு பிரிவின் உறுப்பினர் ஒருவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் ஊடகவியலாள் கீத் நொயார் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இராணுவ மேஜர் ஒருவர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.