இலங்கை கடற்படை உதவியுடன் புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்

(UDHAYAM, COLOMBO) – பாலதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் வருடாந்த உற்சவம் இலங்கை கடற்படையினரின் உதவியுடன் சிறப்புற நடைபெற்றது.

குறித்த பண்டிகையில் யாழ் மறை மாவட்ட ஆயர் அருட்தந்தை ஓய்வுபெற்ற வைத்திய கலாநிதி ஜெஸ்டின் பெர்னாட் ஞானபிரகாசம் மற்றும் வாளைப்பாடு திருச்சபையின் அருட்தந்தை எஸ் . விமலசேகரன் ஆகியோரினால் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

சுமார் 15,000 ற்கு மேற்பட்ட கத்தோலிக்க பக்தர்கள் குறுநகர், நாவாந்துறை, பாசையூர், வலைப்பாடு, இரனைமதநகர், பள்ளிக்குடா, மாந்ததீவு, யாழ்ப்பாணம், நீர்கொழும்பு, பருத்தித்துறை, மற்றும் மன்னார் ஆகிய இடங்களிலிருந்து 224 படகுகள் மற்றும் இழைப் படகுகளை பயன்படுத்தி வருகைதந்திருந்தனர்.

குறித்த நிகழ்விற்கு வருகைதந்த பக்தர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு தேவையான கடல் போக்குவரத்து வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள், முகாம்கள் அமைத்தல், உணவு, மருத்துவ வசதிகள், கடல் ஆம்புலன்ஸ், சுகாதார மற்றும் குடிநீர் வசதிகள், ஆகியவற்றுடன் பக்தர்கள் பாதுகாப்புக் கருதி விஷேட கடற்படை பிரிவின் உயிர் காக்கும் படையினர் சேவையும் கடற்படையினரால் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், கடற்படை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *