தீர்மானம்மிக்க கலந்துரையாடல் ஒன்று இன்று (20)

(UTV|COLOMBO) புகையிரத தொழிற்சங்கம் மற்றும் நிதி அமைச்சர் ஆகியத்தரப்புகளுக்கு இடையிலான தீர்மானம்மிக்க கலந்துரையாடல் ஒன்று இன்று நடைபெறவுள்ளது.

இன்றைய கலந்துரையாடலில் சாதகமான தீர்வு காணப்படாவிட்டால், திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று ரயில் பணியாளர்களின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

தொடர்ந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக தொடங்கொடவின் தகவல்படி, நிதி அமைச்சில் நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் போக்குவரத்து அமைச்சரும் கலந்து கொள்ளவுள்ளார்.

வேதனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நிதி அமைச்சர் தவறிவிட்டதாக தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் ரயில் பணியாளர்கள் போராட்டத்தை மேற்கொள்வதாக அறிவித்திருந்தனர்.இருப்பினும் நிதி அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதை அடுத்து, இன்று பிற்பகல் 2 மணிவரையில் இந்த போராட்டம் பிற்போடப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *