ஊடகவியலாளர் ஜமால் கஷோகி கொலை பின்னணியில் சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் – ஐநா

(UTV|COLOMBO) ஊடகவியலாளர் ஜமால் கஷோகியின் மரணத்தின் பின்னணியில் சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் மற்றும் அவரது உயர் மட்ட அதிகாரிகள் இருந்ததற்கான உறுதியான ஆதாரங்கள் உள்ளதாக ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது மரணம் தொடர்பாக சர்வதேச தரத்துடன், சுதந்திரமான முறையில் மீள் விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என செய்தி பதிவு ஆர்வலர் அக்னஸ் கலமாட் குறிப்பிட்டுள்ளார்.

ஜமால் கஷூஷோகி இஸ்ரான்புல்லில் உள்ள சவுதி அரேபிய தூதுவராலயத்திற்குள் வைத்து கொல்லப்பட்டார்.
இந்த கொலை தொடர்பாக மூடிய கதவுகளுக்கு அப்பால், 11 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

விசாரணை முடிவில் அவர்களில் 5 பேருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டது.

இந்த ஊடகவியலாளரின் கொலை தொடர்பாக சர்வதேச நடைமுறை பின்பற்றப்படவில்லை என பல மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *