பேரூந்தில் இரத்தினகல்லை திருடியவர் கைது: வெள்ளவத்தை சம்பவம்

(UTVNEWS | COLOMBO) – இரத்தினகல் ஒன்றை திருடிய நபர் வெள்ளவத்தை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

வௌ்ளவத்தையில் இருந்து பம்பலப்பிட்டிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரிடம் இருந்து 1 இலட்சம் 30 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலையும் இரத்தினகல்லையும் மீட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த இரத்தினகலின் பெறுமதி 82 மில்லியன் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட நபர் பாணந்துறை பகுதியை சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *