2020 ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விலை 43 லட்சம் ரூபா

(UTVNEWS|COLOMBO) – 2020 ஆண்டு டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆரம்பமாகியுள்ளது.

இந்நிலையில், சொகுசு டிக்கெட் ரூ.43 லட்சத்திற்கு விற்கப்படுகிறது.

32-வது ஒலிம்பிக் போட்டி அடுத்த வருடம் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 ஆம் திகதி வரை ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது.

இந்த போட்டிக்காக ஜப்பான் அரசாங்கம் கிட்டத்தட்ட ரூ.1¾ லட்சம் கோடி செலவிடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விலை இந்திய மதிப்பில் ரூ.1,700 முதல் ரூ.2 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

டிக்கெட் பெறுவதற்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கும் ரசிகர்களுக்கு குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்படுகிறது.

இந்த நிலையில் போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் சகல வசதிகளுடன் கூடிய ஆடம்பர டிக்கெட்டை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

கோலாகலமான தொடக்க விழா, நிறைவு விழா மற்றும் 9 நாட்கள் நடக்கும் தடகள போட்டிகளை முழுமையாக பார்க்க வகை செய்யும் இந்த டிக்கெட்டின் விலை ரூ.43 லட்சமாகும். சொகுசு இருக்கை வசதி கொண்ட இந்த டிக்கெட்டில் உணவு, உற்சாக பானங்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன.

ஒலிம்பிக் போட்டிக்காக மொத்தம் 78 லட்சம் டிக்கெட்டுகள் அச்சடிக்கப்படுவதாக போட்டி ஒருங்கிணைப்பாளர்கள் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *