(UTVNEWS|COLOMBO) – ஜனாதிபதி மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோருக்கு இடையிலான பேச்சுவார்த்தைக்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையிலான 7ம் சுற்று பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது.சுதந்திர கட்சியின் சார்பாக அதன் பொதுசெயலாளர் தயாசிறி ஜெயசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுசெயலாளர் மகிந்த அமரவீர மற்றும் சுதந்திர கட்சியின் புதிய பொருளாளராக நேற்று நியமிக்கப்பட்ட லசந்த அழகியவன்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் அதன் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஷ் மற்றும் அதன் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் கலந்து கொண்டனர்.இரண்டு கட்சிகளுக்கும் இடையில் பொதுகூட்டணி ஒன்றை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளின் ஆறாம் சுற்று, கடந்த ஜுன் மாதம் 26ம் திகதி இடம்பெற்றது.