ஈராக் போராட்டம் – ஐக்கிய நாடுகள் கண்டனம்

(UTVNEWS|COLOMBO) – ஈராக்கில் அரசுக்கு எதிராக முன்னேடுக்கபப்டும் போராட்டத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்த சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

ஈராக்கில் நிலவும் வேலையின்மை, பொதுச்சேவைகளின் திருப்தியற்ற தன்மை மற்றும் ஊழலுக்கு எதிராக தாம் போராடுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐந்தாவது நாளை எட்டியுள்ள இந்த போராட்டம் நாட்டின் பல மாகாணங்களில் பரவியுள்ள நிலையில் இருதரப்பு மோதல்களில் போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 99 பேர் உயிரிழந்தனர். சுமார் 4 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், ஈராக்கில் அரசுக்கு எதிரான வன்முறை போராட்டத்தில் சுமார் 100 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ள நிலையில் இந்த சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஐநாவெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுக்கு எதிரான போராட்டத்தில் 99 பேர் பலியானது துன்பகரமானது. இது நிச்சயம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

இவை நிறுத்தப்பட வேண்டும் என ஈராக்கிற்கான ஐக்கிய நாடுகளின் உதவி நிலையத்தின் தலைவர் Jeanine Hennis Plasschaert கூறியுள்ளார்.

இந்த உயிரிழப்புக்களுக்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *