சஜித் பிரேமதாச அமோக வெற்றி பெறுவார் – எம். எச். ஏ. ஹலீம் [VIDEO]

(UTVNEWS|COLOMBO) – சஜித் வருகிறார் என்ற கோசத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜனப் பெரமுனக் கட்சி என்ற வேறுபாடுகளின்றி எல்லோரும் ஒன்று சேர்ந்து அவரை ஆதரிக்க முன் வந்துள்ளனர். எமது வேட்பாளர் சஜித் பிரேமதாச அமோக வெற்றி பெறுவார் என்று முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தெரிவித்தார்.

ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான கூட்டம் மாவில்மடவிலுள்ள கட்சி அலுவலகத்தில் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதியின் அமைப்பாளரும் முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் தலைமையில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு இதனைத் தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில்

ஐக்கிய தேசியக் கட்சியின் இறுதி ஜனாதிபதி வேட்பாளராக ஆர். பிரேமதாச அவர்கள் இருந்தார்கள். அதற்குப் பிற்பாடு எமக்கு அவகாசம் கிடைக்க வில்லை. அவர் ஏழை எளிய மக்களின் மனதை வென்ற ஒரு தலைவர். இன, மத வேறுபாடுகளின்றி செயற்பட்ட தலைவர். அதே போன்று தான் சஜித் பிரேமதாச அவர்களும் திகழ்கின்றார்கள்.

சஜித் பிரேமதாச அவர்கள் வெற்றி பெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை. அவர் நிச்சயமாக இந்த தேர்தலில் வெற்றி பெறுவார். அந்த வகையில் ஹரிஸ்பத்துவ தேர்தல் தொகுதி அதிகளவிலான விருப்பு வாக்குகளுடன் அவர் வெற்றி பெறுவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *