டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் மாற்றம்

(UTV|COLOMBO) – சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது 5 நாட்கள் கொண்டதாக நடத்தப்பட்டு வருகிறது. எதிர்வரும் காலத்தில் அதை முழுமையாக 4 நாள் கொண்ட போட்டியாக மாற்றுவது குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை பரிசீலிக்க முன்வந்துள்ளது.

இதையடுத்து 2023-ல் இருந்து 2031-ம் ஆண்டு வரையிலான எதிர்கால போட்டி அட்டவணையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நாட்களை 5-ல் இருந்து 4 ஆக குறைப்பது குறித்து ஐ.சி.சி-யின் கிரிக்கெட் சபை விரைவில் ஆலோசிக்க உள்ளது.

நான்கு நாள் டெஸ்ட் போட்டியை நடத்துவது குறித்து நாங்கள் நிச்சயம் பரிசீலிப்போம். அதற்கு முன்பாக கடந்த 5-10 ஆண்டுகளில் டெஸ்ட் போட்டிகள் சராசரியாக எத்தனை நாட்கள் வரை நீடித்தது என்பதை பார்க்க வேண்டியது அவசியமாகும் என ஆஸ்திரேலிய கிரிக்கெட் சபை தலைவர் கெவின் ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

ஆஷஸ் போட்டிகள் 4 நாட்கள் கொண்டதாக நடத்தப்பட்டால் முடிவு கிடைக்காமல் போகலாம். ஏனெனில் ஆஷஸ் தொடரில் ஒவ்வொரு டெஸ்டும் 5-வது நாளுக்கு நகர்ந்தது. மற்ற வடிவிலான போட்டியில் இருந்து டெஸ்ட் கிரிக்கெட் வித்தியாசப்படுவதே 5 நாள் என்பதில் தான். இது மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் கடினமானது. 4 நாள் முதல்தர போட்டியை விட 5 நாள் டெஸ்ட் தான் வீரர்களின் திறமையை வலுவாக சோதிக்கிறது. எனவே இது நீடிக்கும் என்று நம்புகிறேன் என ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *