(UTV|COLOMBO) – கடந்த டிசம்பர் 27ம் திகதி சுயாதீன தொலைக்காட்சி சேவையின் (ITN) பிரதிப் பொது முகாமையாளராக, செய்திகள் மற்றும் தற்போதைய விவகாரங்களில் பிரிவின் பதில் பிரதானியாக பதவியேற்றுக் கொண்ட சுதர்மன் ரந்தளியகொடவை குறித்த பதவியில் இருந்து உடன் அமுலுக்கு வரும் வகையில் விலக்குவதாக குறித்த அமைச்சின் ஊடாக சுயாதீன தொலைக்காட்சி சேவையின் தலைவர் அறிவித்துள்ளார்.
இரும்பு சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல் தொடர்பில் நீதிமன்றில் வழக்கு ஒன்று உள்ள நிலையில் இவ்வாறு பதவி வழங்கியமை தொடர்பில் அநேகமானோர் விமர்சங்களை முன்வைத்திருந்தனர்.