(UTV|COLOMBO) – கொழும்பு ஷங்கிரில்லா ஹோட்டலுக்கு அருகாமையில் உள்ள மூன்று ஏக்கர் அரச நிலத்தை 43 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சிங்கப்பூர் நிறுவனமொன்றுக்கு குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றச்சாட்டு ஒன்றினை முன்வைத்துள்ளது.
குறித்த தீர்மானத்திற்கு எந்தவித விலைமனுக்கோரலும் இல்லாது அமைச்சரவையில் தனிப்பட்ட தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்த கட்சியின் ஊடகப்பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்திருந்தார்.