ஈரானின் புரட்சிகர இராணுவ படைப்பிரிவின் தலைவரான ஜெனரல் காசெம் சுலேமானி அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து, அமெரிக்கா – ஈரான் இடையே பதற்ற நிலை தோன்றி வருகின்றது.
இந்நிலையில் ஈரானின் 52 இடங்களை நாங்கள் குறி வைத்துள்ளோம் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ள நிலையில் அதனை எதிர்த்து உலகளாவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.